• மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்

·            மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் 2026 -2027 வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த விளையாட்டு வீரர் வீராங்கனைகள்  இணையதளத்தில்பதிவு செய்ய, வேலூர் மாவட்ட ஆட்சியர் அழைப்பு

                தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஆண்டுதோறும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை, தமிழ்நாடு முழுவதும் மாவட்ட மண்டல மற்றும் மாநில அளவில் நடத்தி வருகிறது. விளையாட்டை  ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியானது, அனைத்து தரப்பினரையும் விளையாட்டில் ஈடுபட செய்யும் மிகச்சிறந்த முயற்சியாகும்.  இதன் மூலம் திறமையான விளையாட்டு வீரர்களை பாராட்டி. அவர்களை ஊக்குவித்து, உரிய அங்கீகாரம் மற்றும் பரிசுகளை வழங்குவது, இந்த போட்டிகளின் முக்கிய நோக்கமாகும்.

வேலூர் மாவட்டம் சார்பாக 2026 -2027 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடுமுதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ/மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள் , பொதுமக்கள்  மற்றும்  அரசு ஊழியர்கள்   என  5  பிரிவுகளில் ஆண் பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில், மாவட்ட அளவில் 45 வகையான  விளையாட்டு போட்டிகளும் , மண்டல அளவில் 14 வகையான  விளையாட்டு போட்டிகளும், மாநில அளவில் மொத்தமாக 45  வகையான விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படவுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்  போட்டிகள் வரும்  செப்டம்பர்  மாதம்  4  ஆம் தேதி  மாவட்ட அளவில் தொடங்கப்படவுள்ளது. 

l  மாவட்ட மற்றும் மண்டல அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு குழு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவர்களுக்கும் தலா  முதல் பரிசாக ரூ.3 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.2 ஆயிரமும், மூன்றாம் பரிசாக 1 ஆயிரமும் வழங்கப்படும்.

l  மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும். குழு போட்டிகளில்  பங்கு பெற்று வெற்றி பெறுபவர்களுக்கும் தலா ரூ.75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ. 50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட உள்ளது. இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றிதழ்கள் மூலம் உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சலுகைகளும் பெற இயலும்.  

l  முன் பதிவு : முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் https://cmtrophy.sdat.in&https://sdat.tn.gov.inஎன்ற இணையதளம் வாயிலாக வீரர்களின் குழு மற்றும் தனி நபர்களின் அனைத்து விவரங்களை பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்திட கடைசி நாள் 31.08.2025 மாலை 6 மணி வரை என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

போட்டிகளில் கலந்து கொள்ள விதிமுறைகள் :

n  பள்ளி (U-19) : 01.01.2008 அன்று அல்லது அதற்கு பின் பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும் மற்றும்  ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு  பயில்பவராக இருத்தல் வேண்டும். மேலும்  பள்ளியிலிருந்து  Bonafied  Certificate  உடன் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

n  கல்லூரி (U-25): 01.07.2001 அன்று அல்லது அதற்கு பின் பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும். 25 வயதிற்குட்பட்டவராக  இருத்தல் வேண்டும். கல்லூரியிலிருந்து  Bonafied  Certificate மற்றும்  ID Card  உடன் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல்,கையுந்துபந்து, மேசைப்பந்து, கைப்பந்து, கிரிக்கெட், கேரம் , சதுரங்கம் , கோ-கோ ( பள்ளி பிரிவு மட்டும்)  ஸ்பீட் ஸ்கேட்டிங் (Speed Skating)  மற்றும் யோகாசனா ஆகிய விளையாட்டுகள் மாவட்ட அளவிலும் மற்றும் டென்னிஸ், பளுதூக்குதல், கடற்கரை கையுந்துபந்து, வாள்விளையாட்டு , ஜுடோ, குத்துச்சண்டை மற்றும் சாலை சைக்கிளிங் (Road Cycling) , வூஷு (Wushu),  வில்வித்தை (Archery) , ஜிம்னாஸ்டிக்ஸ் (Gymnastic), கயாக்கிங் & கனாயிங்  (Kayaking & Canoeing) , துப்பாக்கிசுடுதல் (Shooting)  மற்றும்  ஸ்குவாஷ் ( Squash)  போட்டிகள்  ஆகியவை மண்டல அளவிலும்  நடத்தப்படவுள்ளது.

n  பொதுப்பிரிவு :  15 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்க இயலும்.   இதில் 35 வயது  எனில் 01.01.1991 அன்று அல்லது அதற்கு பின் பிறந்தவராகவும் 15 வயது எனில் 01.01.2011 அன்று அல்லது அதற்கு முன் பிறந்தவராகவும் இருத்தல் வேண்டும். ஆதார் அட்டையில் உள்ள மாவட்டத்தில் மட்டுமே கலந்து கொள்ள இயலும்.

கபடி, சிலம்பம், தடகளம், இறகுப்பந்து, கையுந்துப்பந்து, கேரம், கிரிக்கெட், கால்பந்து , மற்றும் யோகாசனா (Yogasana) ஆகிய விளையாட்டுகள் பொதுப்பிரிவில் உள்ளவர்களுக்கு போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

n  ஈ ஸ்போர்ட்ஸ் (E Sports) :  இதில்  15 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் ( 01. 01. 1991 ஆம் ஆண்டிலிருந்து 01. 01. 2011 ஆம் ஆண்டுவரை பிறந்தவர்களுக்கு) ஆதார் அட்டையில் உள்ள மாவட்டத்தில் மட்டுமே கலந்து கொள்ள இயலும்.

தனி விளையாட்டில்  இஏஎப்சி26 (EAFC26) , ஸ்ட்ரீட் பைட்டர் (Street Fighter),  என்பிஏ 2கே26 (NBA 2K26) , போட்டிகளும் , குழு விளையாட்டில் போகிமான் யூனிட் (Pokemon Unite) , வலோரெண்ட் (Valorant) , பிஜிஎம்ஐ (BGMI)  போட்டிகளும் நேரடி மாநில அளவிலும் நடத்தப்படவுள்ளது.

n   மாற்றுத்திறனாளி: இதில் வயது வரம்பு இல்லை, மாற்றுத்திரனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் ஆதார்  அட்டை  நகலுடன் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.

1.                     மாற்றுத்திரனாளி  (Physicaly Challenged ) - 100 மீ ஓட்டம், குண்டு எறிதல், இறகுப்பந்து மற்றும்  வீல்சர் மேசைப்பந்து.

2.                  பார்வைத்திறன்  மாற்றுத்திரனாளி  (Visually  Challenged) - 100 மீ ஓட்டம், குண்டு எறிதல், சிறப்பு கையுந்துபந்து.

3      மனவளர்ச்சி குன்றியோர் (Persons with Intellectual Disabilities) -  100 மீ ஓட்டம், குண்டு எறிதல்,

எறிபந்து , நீச்சல்.

4       செவித்திறன் மாற்றுத்திரனாளி ( HearingImpaired) 100 மீ ஓட்டம், குண்டு எறிதல், கபடி.

5.  பெருமூளை வாதம் (Cerebral Palsy CP)   தடகளம் மற்றும் கால்பந்து ஆகிய விளையாட்டு போட்டிகள் நேரடி மாநில அளவிலும் நடத்தப்படவுள்ளது.

n  அரசு ஊழியர்கள் : தற்போது பணியில் உள்ளவர்கள் மட்டும் பணிபுரியும் மாவட்டத்தின் சார்பாக மட்டுமே கலந்து கொள்ள இயலும் கபடி, தடகளம், இறகுப்பந்து கையுந்துபந்து, சதுரங்கம் , யோகாசனா (Yogasana) மற்றும் கேரம் ஆகிய விளையாட்டுகள்  அரசு ஊழியர்களுக்கு போட்டிகள் நடத்தபடவுள்ளது.

   இணையதளம் மூலம் பதிவு செய்தவர்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க முடியும். மேலும் முக்கிய விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் , மாவட்ட விளையாட்டு அரங்கம், வேலூர் அவர்களை7401703483 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவேலூர் மாவட்ட ஆட்சியர்  பி.எஸ். லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளார்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.