• அல்லேரி கிராம வளர்ச்சி திட்ட பணிகள் அமைச்சர் ஆய்வு.

·        அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம், அல்லேரி கிராமத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு.

வேலூர் மாவட்ட ம், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம், அல்லேரி கிராமத்தில்  பள்ளி, ஆஷா பணியாளர் இருப்பிடம், இரு சக்கர அவசர ஊர்தி, நியாய விலை கடை, பள்ளி வகுப்பறை கட்டடம் ஆகிய இடங்களில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ம.விஜய் பாலாஜி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம், அல்லேரி கிராமத்தில் உள்ள அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட ஆரம்ப பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்து, மாணவ, மாணவிகளின் கற்றல் திறன்களை கேட்டறிந்து, இனிப்புகளை வழங்கினார்.  

தொடர்ந்து அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம், அல்லேரி கிராமத்தில் ஆஷா (ASHA) பணியாளர் இருப்பிடத்தில் வைக்கப்பட்டுள்ள அவசர கால மருந்துகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  மேலும், அல்லேரி கிராமத்தில் இருசக்கர அவசர ஊர்தி (108) ஓட்டுநரிடம் அவசர கால சிகிச்சைக்கு தேவையான  மருந்துகள்  இருப்பு  குறித்து கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம், அல்லேரி கிராமத்தில் ரூ.13.45 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நியாய விலைக் கடையின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  இந்த ஆய்வின்போது பணிகளை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினார்.  மேலும், பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

பின்னர் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம், அல்லேரி பலாமரத்துக்கொல்லை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ரூ.13,65,000/- மதிப்பில் கட்டப்பட்டுள்ள 2 புதிய வகுப்பறை கட்டடத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து, மாணவ, மாணவிகளின் ஆங்கில புலமையை கேட்டறிந்து, பாராட்டி, மாணவர்கள் நன்றாக படிக்கும்படி அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்துறை அமைச்சர் ம.விஜய்பாலாஜி, செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு அல்லேரி மலை கிராமத்தில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை வசதி, மின்சாரம் வசதி, மருத்துவம் போன்ற கோரிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதனடிப்படையில் முதற்கட்டமாக வரதலம்பட்டு மலை அடிவாரத்திலிருந்து அல்லேரி ஊராட்சி நெல்லிமரத்துக்கொல்லை வரை சுமார் 8.00 கி.மீ நீளத்திற்கு தார் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.  குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய இந்த பகுதியில் 2 கிணறுகள் தூர்வாரப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.

அல்லேரி பகுதியில் உள்ள அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட ஆரம்ப பள்ளியை ரூ.5.13 இலட்சம் மதிப்பில் புனரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இனிவரும் காலங்களில் இப்பகுதி மக்களின் அனைத்து அடிப்படை தேவைகளும் பூர்த்தி செய்யப்படும். இப்பகுதியிலுள்ள மாணவர்கள்  நல்ல தரமான  கட்டடத்தில்  நல்ல தகுதியுள்ள ஆசிரியர் தலைமையின்  கீழ் நல்ல கல்வியை பெறுவார்கள்.

இந்த ஆய்வின்போது வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் த.வேலழகன் (அணைக்கட்டு), ரு.ம.சுதாகர் (காட்பாடி), மு.ம.வினோத் கண்ணன் (வேலூர்), ஏ.தென்றல்குமார் (கீ.வ.குப்பம்), க.சிந்து (குடியாத்தம்), மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரேமலதா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திருகுணஐயப்பத்துரை, மாவட்ட சுகாதார அலுவலர்  மரு.விஜய் சந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.