• வேலூரில் ஈஷா கிராமோத்சவம் விளையாட்டு போட்டிகள்.
· வேலூரில் ஈஷா யோகா சார்பில் கிராமோத்சவம் விளையாட்டு போட்டிகள் – இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்று விளையாடினர்.
வேலூர் மாவட்டம், வேலூரில் உள்ள நேதாஜி விளையாட்டரங்கில் 18-வது கிராமோத்சவ விளையாட்டு போட்டிகள் விழா ஈஷா யோகா அமைப்பின் சார்பில் நடைபெற்றது. இதனை நாராயணி மருத்துவமனை இயக்குநர் பாலாஜி துவங்கி வைத்தார். இதில் கைப்பந்து மற்றும் எறிபந்து போட்டிகள் நடைபெற்றது. பல்வேறு அணிகளை சேர்ந்த இளைஞர்கள் ஆர்வமுடன் போட்டிகளில் பங்கேற்று விளையாடினார்கள்.
இதில் கைப்பந்து போட்டிகளில் சோழன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி முதலிடமும், இரண்டாம் இடம் பொம்மையார்பாளையம் அணியும், மூன்றாம் இடம் ஏ.என்.பிரண்ட்ஸ் அணியும் பிடித்தனர்.
இதில் வெற்றி பெறும் அணிகள் செப்டம்பர் மாதம் கோவை ஈஷா மையத்தில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று விளையாடவுள்ளனர். கைப்பந்து போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ஈஷா யோகா சார்பில் ஐந்து லட்சமும், எறிபந்து போட்டிகளில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ஐந்து லட்சமும் பரிசாக வழங்கவுள்ளனர்.

Comments
Post a Comment