• ஆடி வெள்ளி, ஆடிப்பூரம்.

·         ஆடி வெள்ளி, ஆடிப்பூரம் - கோவில்களில் அம்மனுக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம். 

·         ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் அகிலாண்டீஸ்வரி அம்மனுக்கு மீனாட்சி அலங்காரம். 

·      கருமாரியம்மன் ஆலயத்தில் சையன துர்கை அலங்காரம், செல்லியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரங்களை செய்து தீபாராதனைகள் சாமி வீதி உலா - திரளான பக்தர்கள் வழிபாடு.

     வேலூர் மாவட்டம், வேலூர் கோட்டை, ஸ்ரீ அகிலாண்டீஸ்வரி சமேத ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் ஆடிப்பூர பிரம்மோற்சவம் நிறைவடைந்ததை அடுத்து வேத மந்திரங்கள் முழங்க அகிலாண்டீஸ்வரி அம்மன் சன்னதியிலிருந்து கொடி இறக்கப்பட்டது (துவஜ அவரோஹனம்). கொடி இறங்கிய பின்னர் அகிலாண்டீஸ்வரி அம்மனுக்கு தங்கக்கவசம் அணிவித்து மீனாட்சி அலங்காரங்களை செய்து ஆடிப்பூரம் என்பதால் பல்லாயிரக்கணக்கான வளையல்களை கொண்டு அலங்காரங்களை செய்து  மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் கலவை சச்சிதானந்த சுவாமிகள் ஆலய செயலாளர் சுரேஷ் உள்ளிட்டோரும் திரளான பக்தர்களும் சாமி தரிசனம் செய்தனர்.

        இதேபோல் வேலூர் டிட்டர்லைன் பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் கருமாரியம்மனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு உற்சவர் துர்கை அம்மன் சையன கோலத்தில் அலங்காரம் செய்து வளையல்களால் அலங்காரம் செய்து தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

        இதேபோல வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள செல்லியம்மன் ஆலயத்தில் செல்லியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரங்களை செய்து தீபாராதனைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.