• தமிழ்நாடு பாட நூல்கள் தமிழகத்திலேயே அச்சிட முன்னுரிமை.
· தமிழ்நாடு பாடநூல் கழகம் பாட நூல்கள் அச்சிடுவதில் தமிழகத்திலேயே அச்சிட முன்னுரிமை அளிக்கப்படும்.
· தேவையான பாடநூல்கள் அனைத்தும் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது - தமிழ்நாடு பாடல்நூல் கழக தலைவர் லயோலா மணி காட்பாடியில் பேட்டி.
வேலூர் மாவட்டம், காட்பாடியில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் லயோலா மணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தார்.
அவருடன் காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் சுதாகர், நிறுவன அதிகாரி வெண்ணிலா உடன் இருந்தார். ஆய்வின்போது அங்குள்ள குறைகளை விரைவில் நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும் எடுத்து கூறினார். விளக்குகள் சரியாக எரியவில்லை. சென்னையில் உள்ள அலுவலகத்தை தொடர்பு கொண்டு சிறு சிறு குறைபாடுகள் இருந்ததை சரி செய்யவும் கூறினார்.
பின்னர் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் லயோலா மணி செய்தியாளர்களிடம் கூறுகையில், மாண்புமிகு முதல்வர் விஜய் மற்றும் பள்ளிகல்வி துறை அமைச்சர் ஆகியோர் ஆலோசனையின்படி பாடநூல் கிடங்கை பார்வையிட்டு ஆய்வு செய்தேன். பல குறைகள் இருந்தது அதனை சரி செய்ய அறிவுறுத்தியுள்ளேன்.
இந்த ஆட்சி மாணவர்களுக்கான ஆட்சி இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள். அவர்கள் படிக்கும் பாட புத்தக கிடங்கை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டுமென முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையில் 4-வது இடமாக தற்போது ஆய்வு செய்துள்ளேன். பாட புத்தக குறைபாடுகள் சரி செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் புத்தகங்கள் தட்டுப்பாடு உள்ளது. காரணம் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கவே அங்கு புத்தகங்கள் தட்டுபாடு அதுவும் சரி செய்யப்பட்டுவிட்டது.
உருது பாடபுத்தகங்கள் அனைத்தும் வழங்கப்பட்டுவிட்டது. தவறுதலாக புத்தக எண்ணிகையை பள்ளியிலிருந்து கொடுத்திருப்பார்கள். குறைகளை சொல்லுங்கள் அவைகள் உடனுக்குடன் சரி செய்யப்படும். பாடநூல் கழகத்திற்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால் அவைகள் மீட்கப்படும் யாரிடம் ஆக்கிமிப்பு இருந்தாலும் அவர் எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும் அது மீட்கப்படும் சட்டபடி தண்டிக்கப்படுவார்கள்.
ஆந்திராவில் கடந்த கால ஆட்சியில் பாடபுத்தகங்கள் அச்சடிக்கப்பட்டது. ஆனால் தமிழகத்திற்கு முன்னுரிமை அளிக்க முதல்வரும் பள்ளிகல்வி துறை அமைச்சரும் உள்ளனர். ஆகவே தமிழகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும். இங்கு ஆய்வு செய்தேன். சின்ன சின்ன பிரச்சணைகள் விரைவில் சரி செய்யப்படும். முதல்வர் ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த எனக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். அனைவரும் வியக்கும் அளவுக்கு எனது செயல்பாடுகள் இருக்கும்.
பாடநூல் பற்றாக்குறையை சரி செய்து வருகிறோம். எல்லா இடங்களுக்கும் புத்தகங்கள் போய் சேர்ந்துவிட்டது. கோவை கல்லூரி மாணவர் கொலையில் யாரும் அரசியல் செய்யவில்லை. சட்டபடி நடவடிக்கை எடுப்பார்கள். சட்டம் தன் கடமையை செய்யும் என கூறினார்

Comments
Post a Comment