• குடும்ப அட்டையில் E-KYC கைவிரல் ரேகை பதிவு செய்தல் சிறப்பு முகாம்.

·        குடும்ப அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் E-KYC  கைவிரல் ரேகை பதிவு செய்தல் சிறப்பு முகாம் வருகிற 08.08.2026 மற்றும்  09.08.2026 அனைத்து நியாய விலை கடைகளிலும் நடைபெறுகிறது மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்

                வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் தங்களது குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். தற்போது வரை கைவிரல் ரேகையை பதிவு செய்யாதவர்கள் 08.08.2026 மற்றும் 09.08.2026 ஆகிய நாட்களில் அனைத்து நியாய விலை கடைகளில் நடைபெறும் சிறப்பு முகாமிற்கு சென்று தங்களது கைவிரல் ரேகையினை பதிவு செய்திட கேட்டு கொள்ளப்படுகிறார்கள். மேலும், குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் கைவிரல் ரேகை பதிவு செய்யாமல் பணி நிமித்தமாக வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசிப்பவர்கள் தற்போது வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நியாய விலை கடைகளுக்கு சென்று தங்களது கைவிரல் ரேகையினை பதிவு செய்து தங்களது உரிமையினை உறுதி செய்திட வேண்டும் என   மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.