• முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் கல்லூரியில் சேர Eligiblity Certificate.

·        முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் 2026-2027 கல்வி ஆண்டில் கல்லூரியில் சேர Eligiblity Certificate பெற்று பயனடையுமாறு வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

      2026-2027-ஆம் கல்வி ஆண்டிற்கு கல்லூரி சேர்க்கையின் போது முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு கேந்திரிய சைனிக் போர்டு (KSB) இணையதளத்தில் MBBS/BDS மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு KSB வாயிலாக விண்ணப்பித்திட படை விலகல் சான்றில் தமிழ்நாடு முகவரியை கொண்ட வேலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் கைம்பெண்கள் 2026-2027-ஆம் ஆண்டிற்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல், +2 மதிப்பெண் சான்று, படை விலகல் சான்று அடையாள அட்டை, PPO நகல் ஆதார் அட்டை நகல், மாணவரின் புகைப்படம் மற்றும் NEET தேர்வு முடிவு சீட்டு ஆகியவற்றுடன் வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அணுகி Eligiblity Certificate பெற்று பயனடையுமாறும்,  கடந்த ஆண்டு பெற்ற சார்ந்தோர் சான்றினை பயன்படுத்த கூடாது எனவும் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.