• TABCEDCO மூலம் கடன் மேளா முகாம்கள்.
- தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEDCO) மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகபிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மக்களுக்கு வழங்கப்படும் கடன் திட்டங்கள் - 2026-2027, வங்கி கிளை வாரியாக கடன் மேளா முகாம்கள் நடைபெறவுள்ளது - வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர்
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன், குழுக் கடன் மற்றும் கல்வி கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது. அதன் விவரம் பின்வருமாறு:
|
வ.எண் |
திட்டம் |
தகுதி |
தேவைப்படும் சான்றுகள் |
|
1 |
தனி நபர் கடன் |
1. விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். 2. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5,00,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும். 3. விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். 4. ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். |
சாதி சான்று, வருமான சான்று மற்றும் பிறப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை மற்றும் வங்கி கோரும் ஆவண நகல்கள் |
|
2 |
சுய உதவி குழுக்கடன் (சிறு கடன்) |
||
|
3 |
கறவை மாடு (ஆவின்) |
||
|
4 |
கல்வி கடன் |
1. விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். 2. ஆண்டு வருமானம் ரூ.5,00,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும். |
வருமானச் சான்றிதழ் |
விண்ணப்ப படிவம் இக்கழக இணையதள முகவரியில் (https://tabcedco.net) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
எனவே, இம்மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள், குழுக்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கடன் விண்ணப்பங்களைப் பெற்று உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து மக்கள் இத்திட்டத்தை அதிக அளவில் பயன்படுத்தி கொள்ளும் வகையில், வேலூர் மாவட்டத்தில், மத்திய கூட்டுறவு வங்கி கிளை வாரியாக கடன் மேளா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,
மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு சங்கம் – கிளைகள்:
1. வேலூர் (தலைமையிடம்), பாரதி நகர் (சத்துவாச்சாரி, வேலூர்), குடியாத்தம் மற்றும் கே.வி.குப்பம், நாள்: 13.08.26, நேரம்: 10AM-4PM
2. ஒடுக்கத்தூர், பள்ளிகொண்டா, பேர்ணாம்பட்டு, வேலூர் பஜார் தெரு, மற்றும் காந்தி நகர் (கிழக்கு) காட்பாடி, நாள்: 20.08.26, நேரம்: 10AM-4PM
3. காந்தி நகர் (மேற்கு) காட்பாடி, பொன்னை, வேலூர் சுகர் மில் மற்றும் தோட்டப்பாளையம், நாள்: 27.08.26, நேரம்: 10AM-4PM
4. அணைக்கட்டு, கமலாட்சிபுரம், பரதராமி, ஊசூர், மற்றும் லத்தேரி, நாள்: 03.09.26, நேரம்: 10AM-4PM
மேற்குறிப்பிட்ட இடங்களில் கடன் மேளா முகாம்கள் நடத்தப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. உரிய ஆவணங்களுடன் மேற்குறிப்பிட்ட முகாம்களில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment