• TNPSC, TNSURB, TRB, SSC, RRB, IBPS பயிற்சி.

  • வேலூர் மாவட்டத்தை சார்ந்த படித்த இளைஞர்கள் தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும்  தொகுதி–II & IIA தேர்வுக்கு வேலைவாய்ப்பு மற்றும்  பயிற்சி துறையால் நடத்தப்படும் கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் அதிக அளவில் கலந்து கொண்டு தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு வேலையை பெற்று பயனடையுமாறு  மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு மற்றும்  பயிற்சி துறையால் வேலூர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக TNPSC, TNSURB, TRB, SSC, RRB மற்றும் IBPS போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

                தற்போது,  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி II & IIA தேர்விற்கான அறிவிப்பு 11.08.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது. எனவே, தொகுதி-II & IIA கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் வேலூர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக சிறந்த பயிற்றுநர்களை கொண்டு 01.09.2026 முதல்  நடத்தப்படவுள்ளது. அதிகளவிலான பயிற்சி தேர்வுகளும் மற்றும் மாநில அளவிலான மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகிறது. மேலும், தகவல்களுக்கு வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அலுவலக வேலை நாட்களில் நேரில் அணுகி அறிந்து கொள்ளலாம் அல்லது தொலைபேசி எண் 0416-2290042 மற்றும் 9499055896 வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்புகளில் வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அதிக அளவிலான  கலந்து கொண்டு தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு  வேலையை பெற்று பயனடையுமாறு வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.