• வேலூர் நியாய விலை கடையில் 1 கிலோ ரூ.35/-க்கு வெங்காயம் விற்பனை.

  • வேலூர் கற்பகம் கூட்டுறவு  நியாய விலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ ரூ.35/-க்கு வெங்காயம் விற்பனை - வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.

வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் வேலூர் கற்பகம் கூட்டுறவு  நியாய விலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ ரூ.35/-க்கு வெங்காயம் விற்பனையை தொடங்கி வைத்தார்.  

அத்தியாவசியப் பொருட்களின் விலையில் ஏற்படும் அசாதாரண ஏற்றத் தாழ்வுகளின்போது உரிய சந்தை தலையீடு மேற்கொள்ளவும், அத்தகைய பொருட்கள் பொதுமக்களுக்கு (குடும்ப அட்டைதாரர்களுக்கு) அரசு மற்றும் கூட்டுறவு நிறுவனங்களின் வாயிலாக நியாயமான விலையில் போதுமான அளவில் கிடைக்க அரசால் ஆணையிடப்பட்டதற்கிணங்க, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தினால் NAFED மூலமாக வெங்காயம் கொள்முதல் செய்து நியாய விலை கடைகளில் ஒரு கிலோ ரூ.35/- என குறைந்த விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக நகர்ப்புறங்களில் இயங்கும் 146 நியாய விலை கடைகளில் ஒரு குடும்ப அட்டைதாரருக்கு ஒரு கிலோ வீதம் 20,000 கிலோ வெங்காயம் ஒரு கிலோ ரூ.35/- என்ற விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

வெங்காயம் விற்பனை எவ்வித புகாருக்குமிடமின்றி சீராக விநியோகம் செய்யப்படுவதை கண்காணிக்க பொறுப்பு அலுவலர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் தொடர்பு அலுவலராக (Liasion Officer) துணைப்பதிவாளர் (பொவிதி) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிகழ்வின்போது கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திருகுணஐயப்பதுரை உட்பட பலர் உடனிருந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.