• வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை 1,600 விநாயகர் சிலைகள்.
· வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 1,600 பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு
· இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் மகேஷ் வேலூரில் பேட்டி.
வேலூர் மாவட்டம், வேலூர், சத்துவாச்சாரியில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்து ஆலோசனை கூட்டம் இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் மகேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் விநாயகர் சதுர்த்தி குழுவினர் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
பின்னர் இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், 44-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா தமிழகம் முழுவதும் நடக்கிறது இந்த விழா கடந்த ஆட்சி காலத்தில் அதிமுக, திமுக மாறி மாறி ஆட்சி செய்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட பல்வேறு தடைகள் நீதிமன்ற வழிகாட்டுதல்கள் கொடுத்துள்ளனர். ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை. ஜோசப் விஜய் ஆட்சி மாற்றினார்கள். மக்கள் ஆனால் திமுக-வின் மறு உருவமாக உள்ளது தவெக.
ஆந்திரா, கேரளா, கர்நாடகவில் எந்த வழிகாட்டுதல்களுமில்லை. இது மக்களுக்கான விழா. இது சனாதன தர்ம விழா 16-ம் தேதி விநாயகர் விஜர்சன் ஊர்வலம் செல்லும் கொணவட்டம் வழியாகசெல்ல கூடாது என சொல்கிறார்கள். வரும் 16-ம் தேதி திரைப்பட இயக்குநர் மோகன்.ஜி கலந்து கொள்கிறார்.
விநாயகர் விஜர்சனம் செய்யும் இடங்களில் இரவு நேர மின் விளக்கு ஆகியவைகள் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி வேலூர் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 1,008 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கிறோம். திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் சேர்த்து மொத்தம் 1,600 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தலைப்பில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவோம். இந்த ஆண்டு தமிழர் பண்பாடும் சனாதன இந்து மதமும் ஒன்று என்ற தலைப்பில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடவுள்ளோம் என கூறினார்.

Comments
Post a Comment