• செப்டம்பர்-2026 வேலூர் மாவட்ட மனுநீதி நாள் முகாம்.
- செப்டம்பர்-2026 மாதத்திற்கான வேலூர் மாவட்ட மனுநீதி நாள் முகாம்.
- காட்பாடி வட்டம், சேர்க்காடு கிராமத்தில் 09.09.2026 அன்று நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சி தலைவர்.
வேலூர் மாவட்டத்தில் செப்டம்பர் – 2026 மாதத்திற்கான மனுநீதி நாள் முகாம் காட்பாடி வட்டம், திருவலம் உள்வட்டம், சேர்க்காடு கிராமத்தில் 09.09.2026 (புதன்கிழமை) காலை 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது . மேற்படி மனுநீதி நாள் முகாம் நடைபெறும் வளாகத்தில் அரசு துறையின் செயல்பாடுகள் மற்றும் நலத்திட்டங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் விளம்பர பதாகைகள் மற்றும் காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.
பொதுமக்கள் தங்களது தொலைபேசி எண் மற்றும் ஆதார் எண்களை குறிப்பிட்டு உரிய ஆவணங்களுடன் மனு அளித்து மனுநீதி நாள் முகாமில் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ், தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment