• வேலூரில் மாநில ஜுனியர் தடகள போட்டிகள்.
· 2500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற இப்போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வென்றது
· வேலூர் மாவட்ட ஆட்சியர் கோப்பைகளை வழங்கினார்.
வேலூர் மாவட்டம், காட்பாடியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டரங்கில் 38-வது தமிழ்நாடு மாநில அளவிலான ஜுனியர் தடகள போட்டிகள் கடந்த 28-ம் தேதி துவங்கி 30-ம் தேதி வரையில் மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதுமிருந்து 2500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
போட்டிகள் நிறைவடைந்த நிறைவு நாளில் பரிசளிப்பு விழா வேலூர் தடகள சங்கத்தின் தலைவர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட ஆட்சியர் லீலாஅலெக்ஸ் கலந்து கொண்டு கோப்பைகளையும் சான்றுகளையும் வழங்கினார்.
இவ்விழாவில் காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சுதாகர், தமிழ்நாடு தடகள சங்க நிர்வாக குழு உறுப்பினர் லதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளாக மொத்தம் 20 வயது, 18 வயது, 16 வயது, 14 வயது என நான்கு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது. 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர் தடை தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு தடகள போட்டிகள் நடைபெற்றது.
இதில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி 486 புள்ளிகளை பெற்று வென்றது. இரண்டாவது இடத்தை பாடி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 264 புள்ளிகளை பெற்று வென்றது. மூன்றாவது இடத்தை மலை ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 221 புள்ளிகளை பெற்று வெற்றி பெற்றது.

Comments
Post a Comment