• வேலூர் ஜலகண்டீஸ்வரர் ஆலய மஹா சங்கடஹர சதுர்த்தி

  ·         வேலூர் ஜலகண்டீஸ்வரர் ஆலய மஹா சங்கடஹர சதுர்த்தி 

·         ஸ்ரீ விநாயக பெருமானுக்கு சிறப்பு அபிஷேக - வெள்ளிக்கவசம் அணிவித்து மகாதீபாராதனை.

·         திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.

            வேலூர் மாவட்டம், வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்திக்கு முன்னர் கொண்டாடப்படும் ஸ்ரீ மஹா  சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்றது.

     இதனை முன்னிட்டு ஸ்ரீ விநாயக பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகங்களை செய்தனர். அருகம்புல் மாலை, மலர் மாலைகள் அணிவித்து வெள்ளி கவசத்துடன் சிறப்பு அலங்காரங்களை செய்து மகாதீபாராதனைகளும் நடைபெற்றது. 

            விநாயகர் சதுர்த்தி முன்பாக வரும் மஹா சங்கடஹர சதுர்த்தி என்பதால் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

            மேலும் விநாயகர் உற்சவர் சாமி உட்பிரகார உலாவும் வந்தது

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.