• காட்பாடி சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ராஜஸ்தான் நாடோடி குடும்பங்கள்.

   · காட்பாடி வைபவ் நகரில் தங்கி மக்களை அச்சுறுத்தி சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ராஜஸ்தான் நாடோடி குடும்பங்களை உடனடியாக தமிழக அரசு வெளியேற்ற வேண்டும் - பகுதி மக்கள் கோரிக்கை.

         வேலூர் மாவட்டம், காட்பாடியில் வைபவ் நகர் பகுதியில்  ராஜஸ்தானை சேர்ந்த 45 நாடோடி குடும்பங்கள் வைபவ் நகர் வி.ஐ.டி. பல்கலைகழகம் மூன்றாவது நுழைவாயிலின் அருகில் கூடாரங்களை அமைத்து தனியாருக்கு சொந்தமான  இடத்தில் 7 ஆண்டுகளுக்கு மேலாக  தனியார் இடங்களை ஆக்கிரமித்து இருக்கின்றனர். இவர்கள் அந்த பகுதி மக்களுக்கு மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர்.

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பான்பராக், போதை பொருட்கள் சாராயம் போன்றவற்றை ஆந்திரா சித்தூர் அருகே இருந்து கடத்தி வந்து விற்பனை செய்கின்றனர். தட்டி கேட்கும் மக்களை கொலை செய்துவிடுவதாக பகிரங்கமாக மிரட்டல் விடுக்கின்றனர்.

    அத்துடன் இந்த ராஜஸ்தான் நாடோடி குடும்ப பெண்கள் குழந்தைகள் வைத்து காட்பாடி ரயில் நிலையம் வேலூர் பேருந்து நிலையம் பல்வேறு வணிக வளாகம் போன்ற இடங்களில் பிச்சை எடுக்கின்றனர். காசு கொடுக்க மறுப்பவர்களை கையை பிடித்து இழுத்து கட்டாய பண வசூலில் ஈடுபடுகின்றனர்.

    மேலும் போதை பொருட்களை பள்ளி கல்லூரியின் அருகில் இவர்கள் விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது. மேலும் இவர்கள் மீது புகார் அளித்தார். காவல் துறையே புகார் அளிப்பவர்களை அவர்கள் உங்களை கொலை செய்து விடுவார்கள். பவாரியா கும்பல் என மிரட்டி அனுப்புகின்றனர். மேலும் வீடுகளில் திருடுவது போன்ற பணிகளையும் இவர்கள் செய்கின்றனர். இவர்கள் மீது புகார் அளித்தால் மாவட்ட நிர்வாகம் உட்பட யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை.

           கையில் ஆயுதங்களை வைத்து மிரட்டுவது இவர்களின் வாடிக்கை. காவல் துறையும் இவர்கள் போதை பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்ததால் இரண்டு முறை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனாலும் இதன் பின்னரும் இவர்கள் வியாபாரத்தை தொடர்கின்றனர். இவர்கள் எந்த நிறுவனங்களிலோ தொழிற்சாலைகளிலோ பணிபுரிவது கிடையாது. இடங்களை ஆக்கிரமித்து இட உரிமையாளர்களை மிரட்டுவதும் இவர்களின் வாடிக்கை. இவர்களுக்கு சில அரசியல் கட்சியினரும் உதவுகின்றனர்.

     மேலும் இவர்கள் மின் கம்பத்திலிருந்தே கொக்கி போட்டு கூடாரங்களுக்கு மின்சாரத்தை திருடுகின்றனர். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. காவல் துறையோ இவர்கள் அனைவரும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது உண்மைதான் எனவும், வருவாய் துறையினர் அனுமதி கொடுத்தால் இவர்கள் அப்புறப்படுத்துவதாக கூறுகின்றனர். நாடோடி குடும்பங்கள் இடம் மாறிகொண்டே இருப்பார்கள். ஆனால் இவர்கள் எட்டு ஆண்டுகளாக இங்கேயே தங்கி சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    எனவே தமிழக அரசும் காவல் துறையும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக அப்பகுதி மக்களையே அச்சுறுத்தும் இந்த வட நாட்டு கும்பலை இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால் போதை பொருள் கலாச்சாரத்திற்கும் மேலும் வழிவகுக்கும். எனவே நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோருகின்றனர். அத்துடன் தமிழக அரசு வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களை கணக்கிட உத்தரவிட்டது. ஆனால் இவர்கள் தொழிலுக்கே செல்லாமல் இதே போன்று சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு தப்பித்து கொள்கின்றனர். காட்பாடி வேலூருக்கு இவர்கள் ஒரு பெரும் சவாலாகவே திகழ்கின்றனர்.

 

 



Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.