• ராஜஸ்தான் நாடோடி குடும்பங்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புகார்.

 

·         ராஜஸ்தான் நாடோடி குடும்பங்களை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு.

    வேலூர் மாவட்டம், காட்பாடியில், ராஜஸ்தானை சேர்ந்த நாடோடி குடும்பங்கள் வைபவ் நகர் வி.ஐடி பல்கலைகழகம் மூன்றாவது நுழைவாயிலின் அருகில் தனியாருக்கு சொந்தமான  இடத்தில் கூடாரங்களை அமைத்து 7 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கின்றனர்.

     இந்த நிலையில் இந்த 45 குடும்பங்களையும் பக்கத்து வீட்டுகாரர் மற்றும் நிலத்துக்காரரான சிவக்குமார் என்பவர் கூடாரங்களை காலி செய்துவிட்டு வேறு எங்காவது செல்லுங்கள் என மிரட்டுகிறார். இதில் காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் பெயரை சொல்லி மிரட்டுவதால் தங்களுக்கு இக்கூடாரங்களை காலி செய்யாமல் அங்கேயே இருக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவினை அளித்துள்ளனர்.

            இந்த 45 குடும்பங்களும் அரசின் அனுமதியை பெறாமல் மின்சார ஒயரில் கொக்கி போட்டு தொடர்ந்து மின் திருட்டில் ஈடுபடுவதும் புகார் ஆனதால் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து 20 கூடாரங்களுக்கு அனுமதியின்றி மின்சாரம் திருடியதால் தலா ரூ.500 அபராதம் விதித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.