• வேலூர் தர்மராஜா கோவில் கும்பாபிஷேகம்.


 ·         தோட்டப்பாளையம் தர்மராஜா கோவில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.

         வேலூர் மாவட்டம், தோட்டப்பாளையத்தில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ திரௌபதியம்மன் சமேத  தர்மராஜா திருக்கோவில் உள்ளது. இதன் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

     பல்வேறு புனித நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கலசங்களில் வைத்து மூன்று நாட்கள் யாகசாலையில் வைக்கப்பட்டு சிறப்பு யாகங்கள் செய்யப்பட்டது. பூர்ணாஹூதிக்கு பின்னர் மேளதாளங்கள் முழங்க கலசங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ராஜகோபுரம், ஆலய விமானம், மூலவர் சன்னதி ஆகிய கோபுரங்களுக்கு மகா சம்ப்ரோக்ஷணம் எனும் கும்பாபிஷேகமானது நடைபெற்றது.

    இதில் ஜெயசந்திரன் சுவாமிகள், அப்பாஜி சுவாமிகள், வனதுர்கா பீட சுவாமிகள் உள்ளிட்ட திரளான பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.