• மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை.
· மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை – 2026 மாவட்ட அளவிலான போட்டிகள் வேலூர் மாவட்டத்தில் 09.09.2026 முதல் 22.09.2026 வரை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சி தலைவர்.
வேலூர் மாவட்ட அளவிலான மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை போட்டிகள் வருகின்ற 09.09.2026 முதல் 22.09.2026 வரை வேலூரில் உள்ள SDAT மாவட்ட விளையாட்டு அரங்கம், வி.ஐ.டி பல்கலைகழகம், மற்றும் பாகாயத்தில் உள்ள சி.எம்.சி. விளையாட்டு மைதானம், தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய இடங்களில் கீழ்க்கண்ட முறைப்படி நடைபெறவுள்ளது.
தடகளம், இறகுபந்து, கபாடி, சிலம்பம், கைப்பந்து, செஸ், கோ-கோ போன்ற பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் வருகின்ற 09.09.2026 காட்பாடி SDAT விளையாட்டரங்கிலும், கூடைப்பந்து, கால்பந்து, மேசைப்பந்து, கையுந்து பந்து, யோகாசனா பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் வருகின்ற 09.09.2026 காட்பாடி வேலூரில் உள்ள VIT பல்கலைகழகத்திலும், வளைகோல் பந்து பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கான போட்டி வருகின்ற 09.09.2026 காட்பாடி SDAT விளையாட்டரங்கிலும், கிரிக்கெட் பள்ளி மாணவர்களுக்கான போட்டி வருகின்ற 09.09.2026 சி.எம்.சி. விளையாட்டு மைதானம், மற்றும் தந்தை பெரியார் பால்டெக்னிக் கல்லூரி விளையாட்டு மைதானம் பாகாயத்திலும், கேரம் பள்ளி மாணவர்களுக்கான போட்டி வருகின்ற 10.09.2026 காட்பாடி SDAT விளையாட்டரங்கிலும், நீச்சல் பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் வருகின்ற 10.09.2026 காட்பாடி SDAT விளையாட்டரங்கிலும், நடைபெறும் என்பதனை தெரிவித்து கொள்கிறேம். தடகளம், இறகுபந்து, கபாடி, சிலம்பம், கைப்பந்து, செஸ், கோ-கோ, கேரம் பள்ளி மாணவிகளுக்கான போட்டிகள் வருகின்ற 11.09.2026 காட்பாடி SDAT விளையாட்டரங்கிலும் கூடைப்பந்து, கால்பந்து, மேசைப்பந்து, கையுந்து பந்து, யோகாசனா பள்ளி மாணவிகளுக்கான போட்டிகள் வருகின்ற 11.09.2026 காட்பாடி வேலூரில் உள்ள VIT பல்கலைகழகத்திலும், கிரிக்கெட் பள்ளி மாணவிகளுக்கான போட்டி வருகின்ற 11.09.2026 சி.எம்.சி. விளையாட்டு மைதானம் மற்றும் தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி விளையாட்டு மைதானம் பாகாயத்திலும்,ஸ்பீட்ஸ்கேட்டிங் போட்டி பள்ளி/கல்லூரி மாணவ/மாணவிகளுக்கு வருகின்ற 11.09.2026வி.ஐ.டி பல்கலைகழகம் 11 வது கேட் பைபாஸ் ரோடு காட்பாடி,நீச்சல் பள்ளி/கல்லூரி மாணவிகளுக்குகான போட்டி 12.09.2026 காட்பாடி SDAT விளையாட்டரங்கிலும் நடைபெறும் என்பதனை தெரிவித்து கொள்கிறேன். மாற்று திறனாளிகளுக்குகான அனைத்து போட்டிகளும் வருகின்ற 13.09.2026 காட்பாடி SDAT விளையாட்டரங்கிலும் நடைபெறும் என்பதனை தெரிவித்து கொள்கிறேன்.
தடகளம், இறகுப்பந்து, கபடி, சிலம்பம், கைப்பந்து, செஸ், பூப்பந்து, கேரம் கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் வருகின்ற 15.09.2026 காட்பாடி SDAT விளையாட்டரங்கிலும், கூடைப்பந்து, கால்பந்து, மேசைப்பந்து, கையுந்து பந்து, யோகாசனா கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் வருகின்ற 15.09.2026 காட்பாடி வேலூரில் உள்ள VIT பல்கலை கழகத்திலும், வளைகோல் பந்து கல்லூரி மாணவ / மாணவிகளுக்கான போட்டி வருகின்ற 15.09.2026 காட்பாடி SDAT விளையாட்டரங்கிலும், கிரிக்கெட் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி வருகின்ற 15.09.2026 சி.எம்.சி.விளையாட்டு மைதானம் மற்றும் தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி விளையாட்டு மைதானம் பாகாயத்திலும், தடகளம், இறகுப்பந்து, கபாடி, சிலம்பம், கைப்பந்து, செஸ், பூப்பந்து, கேரம் போன்ற கல்லூரி மாணவிகளுக்கான போட்டிகள் வருகின்ற 17.09.2026 காட்பாடி SDAT விளையாட்டரங்கிலும், கூடைப்பந்து, கால்பந்து, மேசைபந்து, கையுந்து பந்து, யோகாசனா போன்ற கல்லூரி மாணவிகளுக்கான போட்டிகள் வருகின்ற 17.09.2026 காட்பாடி வேலூரில் உள்ள VIT பல்கலைகழகத்திலும், கிரிக்கெட் கல்லூரி மாணவிகளுக்கான போட்டி வருகின்ற 17.09.2026 சி.எம்.சி. விளையாட்டு மைதானம் மற்றும் தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி விளையாட்டு மைதானம் பாகாயத்திலும் நடைபெறும் என்பதனை தெரிவித்து கொள்கிறேன்.
பொது பிரிவில் ஆண்களுக்குகான போட்டிகள் தடகளம், இறகுபந்து, கால்பந்து, கையுந்துபந்து, கபடி, சிலம்பம், கேரம், யோகாசனா போட்டிகள் வருகின்ற 19.09.2026 காட்பாடி SDAT விளையாட்டரங்கிலும், ஆண்களுக்குகான கிரிகெட் போட்டி வருகின்ற 19.09.2026 சி.எம்.சி. விளையாட்டு மைதானம் மற்றும் தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி விளையாட்டு மைதானம் பாகாயத்திலும் தடகளம், இறகுப்பந்து, கால்ப்பந்து, கையுந்து பந்து, கபடி, சிலம்பம், கேரம், யோகாசனா பெண்களுக்கான போட்டிகள் வருகின்ற 20.09.2026 காட்பாடி SDAT விளையாட்டரங்கிலும், பெண்களுக்கான கிரிக்கெட் போட்டி வருகின்ற 21.09.2026 சி.எம்.சி. விளையாட்டு மைதானம் மற்றும் தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி விளையாட்டு மைதானம் பாகாயத்தில் நடைபெறும் என்பதனை தெரிவித்து கொள்கிறேன். அரசு ஊழியர்களுக்கு தடகளம், இறகுப்பந்து, கையுந்து பந்து, கபடி, செஸ், கேரம், யோகாசனா ஆண்களுக்கான போட்டிகள் வருகின்ற 21.09.2026 காட்பாடி SDAT விளையாட்டரங்கிலும், தடகளம், இறகுப்பந்து, கையுந்து பந்து, கபடி, செஸ், கேரம், யோகாசனா போன்ற பெண்களுக்கான போட்டிகள் வருகின்ற 22.09.2026 காட்பாடி SDAT விளையாட்டரங்கிலும் நடைபெறும் என்பதனை தெரிவித்து கொள்கிறேன்.
மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையத்தளத்தில் போட்டிகளில் கலந்து கொள்ள பதிவு செய்த வீரர் / வீராங்கனைகள் மேலே கண்டுள்ள தேதிகளில் காலை 7.30 மணிக்கு முன்பாக தங்களுடைய இணைய தளத்தில் பதிவு செய்த நகல், பள்ளி (ம) கல்லூரி மாணவ / மாணவியர்கள் (Bonafide Certificate) உறுதி சான்றிதழ், மாற்று திறனாளிகளின் அசல் அடையாள அட்டை, அரசு ஊழியர்களின் அசல் அடையாள அட்டை மற்றும் பொதுமக்களுக்கு ஆதார் நகல் மற்றும் இருப்பிட சான்றிதழ் ஆகியவற்றுடன் சேமிப்பு வங்கி கணக்கு புத்தக நகலையும் கொண்டு வர அறிவுறுத்தப்படுகிறது. மேலும் வேலூர் மாவட்டத்தை சார்ந்தவர்கள் மட்டுமே இப்போட்டிகளில் பங்கேற்க இயலும் மற்றும் ஒரு நபர் ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். குறிப்பு:- காலை 8.30 மணிக்கு மேல் வரும் எந்த அணியும் கண்டிப்பாக சேர்த்து கொள்ளபடமாட்டது என்பதை தெரிவித்து கொள்கிறோம். தனிநபர் பிரிவுகளில் கலந்து கொள்ளும் வீரர் / வீராங்கனைகள் விளையாட்டு உபகரணங்களை தங்களே கொண்டு வர வேண்டும்.
தனிநபர் மற்றும் அணிகள் போட்டிகளில் நான்கு எண்ணிக்கைக்கும் குறைவாக இருந்தால் போட்டிகள் நடத்த பட மாட்டது. மேலும் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் 5 பிரிவுகளின் கீழ் பதிவு செய்த வீரர் / வீராங்கனைகள் இப்போட்டிகளில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ். லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment