• பேர்ணாம்பட்டில் விவசாயிகள் ஆர்பாட்டம் - கைது.
· பேர்ணாம்பட்டில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகையிட்டு ஆர்பாட்டம் - கைது.
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தமிழக விவசாயிகள் சங்கத்தினர் மாநில பொதுசெயலாளர் உதயகுமார் தலைமையில் முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள் விவசாய விளை நிலங்களை சேதப்படுத்தி விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. எனவே சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை கட்டுப்படுத்த கோரி பலமுறை நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விவசாயிகள் திடீர் முற்றுகையிட்டு ஆர்பாட்டம் செய்தனர். இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். முற்றுகையிட்டு ஆர்பாட்டம் செய்த விவசாயிகளை காவல் துறையினர் கைது செய்தனர்.

Comments
Post a Comment