• வேலூரில் காவலர் தினம்.
· வேலூரில் காவலர் தினம் - உயிர் நீத்த காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல் துறையினர் அஞ்சலி.
வேலூர் மாவட்டம், வேலூரில் உள்ள காவல் துறை பயிற்சி மைதானத்தில் செப்டம்பர் 6 காவலர் தினத்தினை முன்னிட்டு மக்களுக்காக பணியாற்றி உயிர் நீத்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் காவலர்கள் நினைவு தூணுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் உதவி காவல் கண்காணிப்பாளர் தனுஷ்குமார் மற்றும் திரளான காவல் துறையினர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
மேலும் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்வோம். சமூக விரோத செயல்களை ஒடுக்குவோம் என அனைவரும் உறுதிமொழி ஏற்றதுடன் உயிர் நீத்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்து மௌன அஞ்சலியும் செலுத்தினர். இதில் திரளான காவல் துணைகண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் துறையினர் பங்கேற்றனர்.

Comments
Post a Comment