• வேலூரில் முதுகு தண்டுவட மாற்று திறனாளர் விழிப்புணர்வு ஊர்வலம்.

·         வேலூரில் முதுகு தண்டுவட காயத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து மாற்று திறனாளர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம். 

·         மக்கள் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் - ஆட்சியர் லீலா அலெக்ஸ் பேச்சு.

            வேலூர் மாவட்டம், வேலூர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சி.எம்.சி மருத்துவமனை சார்பில், ஊரீசு கல்லூரியிலிருந்து உலக தண்டுவட காயத்தால் பாதித்தோர் தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தினை வேலூர் சட்டமன்ற உறுப்பினர் வினோத் கண்ணா துவங்கி வைத்தார்.

     இதில் திரளான முதுகு தண்டுவட காயத்தால் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளர்கள் மூன்று சக்கர வாகனங்களில் பங்கேற்று முதுகு தண்டுவடத்தை பாதுகாப்போம் என விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் முழக்கங்களை எழுப்பியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த ஊர்வலமானது அண்ணா கலையரங்கம் அருகில் நிறைவடைந்தது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் பங்கேற்று விபத்தில் சிக்கி முதுகு தண்டுவட பாதிப்பை ஏற்படுத்தி கொள்ள கூடாது. மேலும் பயணிக்கும்போது அதிக வேகமாக இரு சக்கர வாகனங்களில் செல்ல கூடாது. விபத்தில் சிக்க கூடாது. மேலும் உயரமான இடங்களில் ஏறி பணி செய்யும் போதும் பாதுகாப்பாக பணியை செய்ய வேண்டுமென பேசினார்.

     இவ்விழாவில் மாற்று திறனாளர் நல அலுவலர் பாபு மற்றும் திரளான மாற்று திறனாளர்கள் பங்கேற்றனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.