• செப்டம்பர் மாத தாயுமானவர் திட்டம்.

·        2026 ஆம் ஆண்டு  செப்டம்பர்  மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இல்லம் சென்று பொது விநியோக திட்ட பொருட்களை விநியோகிக்கும் தாயுமானவர்  திட்டத்தின்கீழ்  செப்டம்பர்  5  மற்றும் 7-ம் தேதிகளில்” தகுதியுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்று திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது என வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர்.                                                   

அரசாணை (நிலை) 82 கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் (எப்1) துறை நாள்.11.08.2025 மற்றும் அரசாணை (நிலை) 114 கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் (எப்1) துறை நாள்.16.10.2025-களின் படி இல்லம் சென்று பொது விநியோகத் திட்டப் பொருட்களை விநியோகிக்கும் தாயுமானவர் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்று திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு  அவர்களின் இல்லத்திற்கே சென்று அத்தியாவசிய பொருட்களை வழங்கும் பணியினை நியாயவிலை கடை பணியாளர்கள் மூலம் மாதம் தோறும் வாகனங்களில் பொருட்களை எடுத்து சென்று விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் 65 முதல் 70 வயதிற்கு  மேற்பட்ட  தகுதியுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி உறுப்பினர்களை கொண்ட 33,791 குடும்ப அட்டைதாரர்கள் பயனடையும் வகையில் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.

2026 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இல்லம் சென்று பொது விநியோகத் திட்டப் பொருட்களை விநியோகிக்கும் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பொருட்களை வழங்கும் வகையில் “செப்டம்பர் 5  மற்றும் 7-ஆம் தேதிகளில்” தகுதியுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது என வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தெரிவித்துள்ளார்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.