• வேலூர் மண்பாண்ட தொழிலாளர்களுக்கான குறைதீர்வு கூட்டம்.
· வேலூர் மாவட்டத்தில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கான குறைதீர்வு கூட்டம் - மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கான குறைதீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. மண்பாண்ட தொழிலாளர்களுக்கான குறைதீர்வு கூட்டத்தில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ஒன்றிய அரசின் அடையாள அட்டைகளை 50 தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது மண்பாண்ட தொழிலாளர்கள் மாவட்ட தொழில் மையத்தை அணுகி பிரதம மந்திரியின் அனைவருக்கும் வேலைவாய்ப்பு திட்டத்தில் (PMEGP) கடனுதவி கோரும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தகுந்த உதவிகள் வழங்கப்படும். மண்பாண்ட தொழிலாளர்களின் கோரிக்கையின்படி மாவட்ட திறன் பயிற்சி மையத்தின் மூலம் மண்பாண்ட தொழில்புரிய ஆர்வமுள்ள நபர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மண்பாண்டங்கள் செய்யும்போது களிமண்ணுடன் சவூடு மண்ணும் தேவைப்படு...