Posts

• வேலூர் பொதுமக்களுக்கு இடையூறாக மதுபான கடைகளை அகற்ற மனு.

Image
·       வேலூர் ஆற்காடு சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இரண்டு அரசு மதுபான கடைகளை உடனே அகற்ற கோரி மதிமுக மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு .       வேலூர் மாவட்டம் , வேலூர், காகிதபட்டறை, ஆற்காடு சாலையில் பழனி ஆண்டவர் முருகர் கோவில் , மசூதி மற்றும் அரசு பள்ளி அருகே இரண்டு அரசு மதுபான கடைகள் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாகவும், குறிப்பாக புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையம் 4 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால்   இந்த பிரதான சாலையில் உள்ள இரண்டு அரசு மதுபான கடைகளுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.            இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்களுக்கு சிரமம் பள்ளிக்கு செல்லும் மாணவ , மாணவிகளும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இரண்டு அரசு மதுபான கடைகளை மூட வேண்டும் என மதிமுக மாவட்ட செயலாளர் கோபி மற்றும் அப்பகுதி பொதுமக்களும் இணைந்து மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமியிடம் மனு அளித்தனர் .  

• காட்பாடி திமுக தோல்வி குறித்து கருத்து கேட்பு.

Image
 ·         காட்பாடியில் திமுக தோல்வி குறித்து தொண்டர்களிடையே கருத்து கேட்பு மற்றும் கள ஆய்வு கூட்டம்.           வேலூர் மாவட்டம் , காட்பாடியில் திமுக வடக்கு மாவட்டத்தின் சார்பில், நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது குறித்து தொண்டர்கள் கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு மற்றும் கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது.       கான்ஸ்டண்ட் ரவிச்சந்திரன் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் ஆகியோர் திமுக தொண்டர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள், கிளை பொறுப்பாளர்கள், நிர்வாகிகளை அழைத்து ரகசியமாக அறையுள் வைத்து தகவலை கூறுமாறு அவர்களின் கருத்துக்களை பெயர் பொறுப்புடன் பதிவு செய்தனர்.     காலை முதல் பகல் வரையில் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்து பேசி வருகிறார்கள். இதில் பெரும்பாலானோர் கூட்டணி கட்சிகள் சரியாக ஒத்துழைக்கவில்லை , கட்சியினரிடையே ஒற்றுமையின்மை ,...

• விபத்தில் மூளை சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்.

Image
       விபத்தில் மூளை சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்.       ராணிப்பேட்டை மாவட்டம் , காவனூரை சேர்ந்தவர் தினேஷ்குமார் (28). இவர் கட்டுமான தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.           இந்த நிலையில் கடந்த 15- ஆம் தேதி கண்ணமங்கலம் கூட்டு சாலையில் இரு சக்கர வாகனத்தில் தினேஷ்குமார் சென்று கொண்டிருந்தபோது இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி சாலை தடுப்புகளில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் படுகாயமடைந்த தினேஷ்குமாரை ராணிப்பேட்டை பூட்டுதாக்கில் உள்ள சி . எம் . சி மருத்துவமனையில் சேர்த்தனர்.     அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தினேஷ்குமார் மூளை சாவடைந்தது. இதனை அடுத்து அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் முன் வந்த நிலையில் தினேஷ்குமாரின் இருதயம் சென்னை எம்.ஜி . எம் மருத்துவமனை , கல்லீரல் ராணிப்பேட்டை சி . எம் . சி மருத்துவமனை, ஒரு சிறுநீரகம் நாராயணி மருத்துவமனை, மற்றொரு சிறுநீரகம் ராணிப்பேட்டை சி . எம் . சி மருத்த...

• வேலூர் மாவட்டத்தில் உளுந்து குறைந்த பட்ச ஆதரவு விலை.

·         வேலூர் மாவட்டத்தில் உளுந்து குறைந்த பட்ச ஆதரவு விலையில் உளுந்து கிலோ ரூ.78.00/-க்கு கொள்முதல் - மாவட்ட ஆட்சி தலைவர். வேலூர் மாவட்டத்தில் 2025-26-ம் ஆண்டு ராபி பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட உளுந்து விளைபொருளை வேலூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் 100 மெ.டன் மற்றும் குடியாத்தம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில்   200 மெ. டன் கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, 11.05.2026 முதல் 09.07.2026 வரை வேலூர் மற்றும் குடியாத்தம் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் குறைந்த பட்ச ஆதரவு விலையில் ஒரு கிலோ உளுந்து ரூ.78.00/- விலையில் கொள்முதல் செய்யப்படவுள்ளது. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் உளுந்துக்கான கிரையத் தொகை அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும் .   இந்த திட்டத்தில் கொள்முதல் செய்யப்படவுள்ள உளுந்து உடன் அயல் பொருட்கள் கலப்பு 2%, கலப்பினம் , அதிகம் சேதமடைந்த பயறுகள் , முதிர்ச்சி அடையாத பயறுகள் 3%, குறைந்த சேதமடைந்த பயறுகள் , வண்டுகள் / பூச்சிகள் தாக்கிய பயறுகள் 4%, ஈரப்பதம் 12% இருக்க வேண்டும் .   ...

• இராணிப்பேட்டை சாலை விபத்துகளை தடுக்கும் “Single Pole Solar Blinkers”.

Image
 இராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் “Single Pole Solar Blinkers” தொடக்க விழா .       இராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு , ஆயுதப்படை தலைமையகம் அருகிலுள்ள சென்னை – மும்பை தேசிய நெடுஞ்சாலையில் “Single Pole Solar Blinkers” அமைப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பே . சிபின் , தொடங்கி வைத்தார் .         மேலும் , மாவட்டம் முழுவதும் புதிதாக கண்டறியப்பட்ட Accident Hotspot Areas சுமார் 51 பகுதிகளில் இந்த அமைப்புகள் நிறுவப்பட உள்ளன .       இந்த அமைப்புகள் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை சுடராக செயல்பட்டு , சாலை விபத்துகள் ஏற்படாமல் தடுக்க உதவும் . மேலும் , சாலை பாதுகாப்பை மேம்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .       இந்நிகழ்ச்சியில் இராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கனகராஜ் , காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் பலர் கலந்து கொண்ட...

• வேலூரில் நீட் தேர்வு கண்டித்து திக ஆர்பாட்டம்.

Image
 ·         வேலூரில் நீட் தேர்வு குளறுபடிகளை கண்டித்தும், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தியும் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்பாட்டம்.             வேலூர் மாவட்டம் , வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் திராவிடர் கழகத்தின் சார்பில் நீட் தேர்வு குளறுபடிகளை கண்டித்தும், நாடு முழுவதும் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய கோரியும் நீட் தேர்வு இனி நடத்த கூடாது என மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.       இதில் திமுக , மதிமுக உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டு நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய கோரி கோஷங்களை எழுப்பினார்கள். இதில் திரளானோர் பங்கேற்று கோஷங்களை எழுப்பினார்கள்.