• வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் குருபெயர்ச்சி.
· வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் குருபெயர்ச்சி. · குரு தட்சிணாமூர்த்தி சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் - பக்தர்கள் வழிபாடு. வேலூர் மாவட்டம் , வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு குரு பகவானுக்கு பால் , தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்களை செய்து சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. பல்வேறு ராசிகாரர்களுக்கும் பரிகாரங்களை செய்து பின்னர் குரு பகவானுக்கு சிறப்பு அலங்காரங்களை செய்து மகாதீபாராதனைகள் நடைபெற்றது. குரு பகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆவதால் குரு மஹா சாந்தி யாகம் நடந்தது. பூர்ஹதிக்கு பின்னர் தீபாராதணைகளும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.