Posts

• இராணிப்பேட்டை மாவட்ட காவல் குறைதீர்வு கூட்டம்.

Image
·         இராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை வாரந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்.       இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பே . சிபின் தலைமையில் நடைபெற்றது .           இக்குறை தீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 33 மனுக்கள் பெறப்பட்டன . மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார் .  

• இராணிப்பேட்டை காவல் பறிமுதல் வாகனங்கள் ஏலம்.

Image
 ·         இராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 18 வாகனங்கள் பொது ஏலம்.         இராணிப்பேட்டை மாவட்டம், மது விலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினரால் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கான பொது ஏலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பே . சிபின் தலைமையில் நடைபெற்றது .       இந்த ஏலத்தில் ஒரு நான்கு சக்கர வாகனம் , ஒரு மூன்று சக்கர வாகனம் மற்றும் 16 இரு சக்கர வாகனங்கள் பொது ஏலம் விடப்பட்டு மொத்தம் ரூ. 5,35,130/- அரசுக்கு ஆதாயமாக பெறப்பட்டது .  

• இராணிப்பேட்டை ரூ.12.6 லட்சம் மதிப்பு 107 செல்போன்கள் மீட்பு.

Image
 ·         இராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ .12.6 லட்சம் மதிப்புள்ள 107 செல்போன்கள் மீட்பு    ·         காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு              இராணிப்பேட்டை மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன்கள் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பே . சிபின் உத்தரவின் பேரில் தனிப்படை மற்றும் மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினர் துரித நடவடிக்கைகள் மேற்கொண்டனர் .       இதன் தொடர்ச்சியாக , காணாமல் போன செல்போன்களின் IMEI எண்களை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப நடவடிக்கையின் மூலம் ரூ .12.6 லட்சம் மதிப்புள்ள 107 செல்போன்கள் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டன . மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில்   மீட்கப்பட்ட செல்போன்கள் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன...

• வேலூர் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

Image
·         வேலூர் மாவட்ட   வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த   ஆய்வு கூட்ட ம் - 213 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 64 இலட்சத்து 29 ஆயிரத்து 955 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் வழங்கினார்.                  வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் ம.விஜய்பாலாஜி தலைமையில், வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலக்ஸ் முன்னிலையில் நடைபெற்றது. முன்னதாக கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்துறை அமைச்சர் ம.விஜய் பாலாஜி 213 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 64 இலட்சத்து 29 ஆயிரத்து 955 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.                 ஆய்வு கூட்டத்தில் வருவாய் துறையின் சார்பில் 12 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் உழ...

• பிச்சனூர் கைத்தறி பூங்கா - அமைச்சர் ஆய்வு.

Image
·         பிச்சனூர் பகுதியில் அமைந்துள்ள சிறிய அளவிலான கைத்தறி பூங்கா - கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்துறை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.                  வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், பிச்சனூர் பகுதியில் அமைந்துள்ள சிறிய அளவிலான கைத்தறி பூங்காவை கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்துறை அமைச்சர் ம.விஜய்பாலாஜி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கைத்தறி நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட பட்டு துணி ரகங்களை பார்வையிட்டார். மேலும் நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட தேசியக் கொடியை பார்வையிட்டார். பின்னர் மாண்புமிகு கைத்தறி தொழிலுள் மற்றும் கதர் துறை அமைச்சர் நெசவாளர்களிடம் கலந்துரையாடி கைத்தறி பூங்காவில் பணியாற்றி கொண்டிருந்த நெசவாளர்களிடம் அவர்களுக்கு வழங்கப்படும் கூலி மற்றும் இதர தேவைகள் குறித்து கேட்டறிந்தார் .   வேலூர் மாவட்டம் , குடியாத்தம் வட்டம் , பிச்சனூர் பகுதியில் சிங்காரவேலர் தொழி லாள ர் நெசவாளர் கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் ச...

• வேலூர் மாவட்டத்தில் வருவாய் தீர்வாயம்.

Image
·          வேலூர் மாவட்டத்தில் வருவாய் தீர்வாயம் ( ஜமாபந்தி ).  

• வேலூரில் குழந்தை தொழிலாளர் உறுதிமொழி.

Image
·          வேலூரில் குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான விழிப்புணர்வு பேரணி, கையெழுத்து இயக்கம் மற்றும் உறுதிமொழி ஏற்பு.               வேலூர் மாவட்டம் , வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஆட்சியர் அலுவலகத்திலிருந்து விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் லீலாஅலெக்ஸ் கொடியசைத்து துவங்கி வைத்தார்.       கையில் விழிப்புணர்வு பதாகைகளுடன் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்த இந்த ஊர்வலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.        ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அதிகாரிகளும் ஆட்சியர் லீலாஅலெக்ஸ் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதி மொழியை எடுத்து கொண்டனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை உதவி அலுவலர் சங்கீதா உள்ளிட்ட அரசு அதி...