Posts

• வேலூரில் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் முகரம்.

Image
 ·          வேலூரில் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் முகரத்தை முன்னிட்டு மார்பில் அடித்தும் கத்தி போட்டும் ரத்தம் சொட்ட சொட்ட முகரத்தை அனுசரித்தனர்.         வேலூர் மாவட்டம் , வேலூரில் ஷியா பிரிவு இஸ்லாமிய மக்கள் கர்பலாவில் நபிகள் நாயகத்தின் பேரன் இமாம் உசேன் குடும்பத்துடன் கொல்லப்பட்ட தினமான இன்று முகரத்தை அனுசரித்து துக்க பாடல்களை பாடிய வண்ணம் கருப்பு உடை அணிந்து   மார்பில் அடித்தும் மார்பில் கத்தி போட்டும் ரத்தம் சொட்ட சொட்ட சோக பாடல்களை பாடிய வண்ணம் ஊர்வலமாக சென்று முகரத்தை அனுசரித்தனர்.       இதில் திரளான ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் பங்கேற்று பிடிசி சாலை , காந்தி சாலை வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் ஷியா பிரிவு மசூதி அருகே வந்து ஊர்வலம் நிறைவடைந்தது. இதனை திரளான மக்கள் மாடிகளில் உயரமான இடங்களில் நின்று பார்வையிட்டனர்.  

• லத்தேரி அருகே இயற்கை விவசாய பண்ணை.

Image
 ·          லத்தேரி அருகே இயற்கை விவசாய பண்ணை - அறிவுதோட்டத்தில் மாணவர்கள் தங்களின் பெற்றோர்களுடன் கிராம விளையாட்டுகள் விழா.         வேலூர் மாவட்டம் , லத்தேரி அருகே காளாம்பட்டு   கிராமத்தில் அறிவுத்தோட்டத்தில் வேளாண் சுற்றுலா துறை சார்பில் பாரம்பரிய விளையாட்டுகளை சிறுவர்களுக்கு இயற்கை சூழலில் கிராம விளையாட்டுகளை சிறுவர் முதல் பெரியவர்கள் வரையில் ஒருங்கிணைந்து பழமையான விளையாட்டுகளை மீட்டெடுக்கும் வகையில் பாண்டி ஆட்டம் , தாயம் , அஞ்சாங்கல் , குலை குலையா முந்திரிக்கா , பூக்கள், விளையாட்டுகள், கோலி , பம்பரம் போன்ற விளையாட்டுகள் மறந்து போன நிலையில் ஒரு நாள் இயற்கை சூழலில் விளையாடினார்கள். இயற்கை உணவையும் உண்டனர்.              இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இயற்கையான சூழ்நிலையில் பாரமபரிய விளையாட்டுகளை விளையாடியது சிறுவர்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...

• வேலூர் உலமாக்கள், பணியாளர்கள் நலத்திட்ட உதவிகள்.

வேலூர் மாவட்டத்திலுள்ள உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தின் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை பெற்று   பயனடையுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார். உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கீழ்கண்ட நலத்திட்ட உதவிகள் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. 1.                  விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை 2.               இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை 3.               ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை 4.               கல்வி உதவித்தொகை 5.               திருமண உதவித்தொகை 6.             ...

• வேலூர் மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு குறை தீர்வு முகாம்

Image
·         வேலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 12- ம் வகுப்பு படித்து பல்வேறு காரணங்களால் உயர்கல்வி பயில இயலாத மாணவ , மாணவிகளுக்கான   சிறப்பு குறை தீர்வு முகாம்    மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 12- ம் வகுப்பு படித்து பல்வேறு காரணங்களால் உயர்கல்வி பயில இயலாத மாணவ , மாணவிகளுக்கான   சிறப்பு குறை தீர்வு முகாம்    மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் , தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.   மாணாக்கர்களுக்கான சிறப்பு குறை தீர்வு முகாமில் 67 மாணவ , மாணவிகள் கலந்து கொண்டு தங்களுக்கான கோரிக்கைகளை மனுவாக மாவட்ட ஆட்சி தலைவரிடம் வழங்கினார்கள் . இம்மாணவ, மாணவிகளிடம் தற்பொழுது அரசு தொழிற்பயிற்சி நிலையம், அரசு மருத்துவ கல்லூரி செவிலியர் பிரிவு, பாலிடெக்னிக், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள இடங்கள் குறித்த விவரங்கள் எடுத்துரைக்கப்பட்டு, அவர்களுடைய விருப்பமான பாடத்திட்டங்கள் குறித்து குறிப்பு எடுத்து கொள்ளப்பட்டது. மாணவ, மாணவிகள் பெற்றோர்களுடன் கலந்தாலோசித்...

• அலிம்கோ மாற்று திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கல்.

Image
·         ஒன்றிய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின்கீழ் செயல்படும் அலிம்கோ நிறுவனத்தின் சார்பில் 260 மாற்று திறனாளிகளுக்கு ரூ.45.65 இலட்சம் மதிப்பில் உதவி உபகரணங்களை வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார். ஒன்றிய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின்கீழ் செயல்படும் அலிம்கோ நிறுவனத்தின் சார்பில் 260 மாற்று திறனாளிகளுக்கு ரூ.45.65 இலட்சம் மதிப்பில்   உதவி உபகரணங்களை வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி . எஸ்.லீலாஅலெக்ஸ் வேலூர் நகர அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.                 இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அலிம்கோ நிறுவனத்தின் சார்பில் 260 பயனாளிகளுக்கு ரூ.45,65,583/- மதிப்பில் 404 வகையான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன. இவற்றில் 132 காதொலி   கருவிகள், 125 கற்பித்தல், கற்றல் கருவிகள், 57 ஊன்றுக்கோல்கள், 22 சக்கர நாற்காலிகள், 47 செயற்கை அவயங்கள், 6 நடைபயிற்சி ஊன்றுக்கோல்கள், பார்வையற்ற மாற்று திறனாளிகளுக்கு 3 கைபேசிகள், 7 பிரெய்லி உபகரணங்கள், தொழுநோய் பாதிக்கப்பட்டவர...

• இடி, மின்னல்-ன்போது செய்யக்கூடியவை / செய்யக்கூடாதவை.

·         இடி மற்றும் மின்னல் தாக்கத்தின்போது தமிழ்நாடு அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள “ செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை” ஆகியவற்றை பொதுமக்கள்   பின்பற்றி இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் மனித உயிரிழப்புகளை தவிர்க்குமாறு   வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.                  தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை-2026 பருவகாலம் தொடங்கி மழை பெய்து வருகிறது. மேலும், எதிர்வரும் அக்டோபர் – 2026ம் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை-2026 பருவகாலம் தொடங்க உள்ளது. இந்த இரு பருவமழை காலங்களிலும் இடி மற்றும் மின்னல் ஆகியவற்றால் மனித உயிரிழப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இதனால் தமிழக அரசு இடி மற்றும் மின்னல் தாக்கத்தின்போது பொதுமக்கள் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து கீழ்கண்டவற்றை பின்பற்றுமாறு தெரிவித்துள்ளது. மின்னல் நேரத்தின் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை:- 1. உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு செல்லுங்கள். Ø   இடி சத்தம் கேட்டவுடன் வெளிப்புற செயல்பாடுகளை உடனே ...