• ஜூன் மாத விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்.
ஜூன் மாத விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் - வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்றது . வேலூர் மாவட்டத்தில் ஜூன் 202 6 -ம் மாத விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் உரிய துறை அலுவலர்கள் பங்கேற்புடன் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலாவதாக தோட்டக்கலை துறை மூலம் துறை சார்ந்த அலுவலர்களால் தேசிய தோட்டக்கலை இயக்கம் 2026-27 குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. அடுத்ததாக கால்நடை பராமரிப்பு துறை மூலம் துறை சார்ந்த அலுவலர்களால் வருகின்ற ஜூலை 1-ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக 30 நாட்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் 100% மானியத்தில் சிறு குறு விவசாயிகளுக்கு இலவசமாக கரவை மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்படுவது தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து, கீழ்க்கண்ட கோரிக்கைகள் விவசாயிகளால் முன் வைக்கப்பட்டன. தென்பாலாறு இணைப்பு திட்டம்...