Posts

• வேலூரில் 12 ஜெயின் பெண் துறவிகள் வருகை.

Image
 ·          வேலூரில் 12 ஜெயின் பெண் துறவிகள் வருகை. ·          ஜெயின் சமுதாயத்தினர் மேளதாளங்கள் முழங்க 700- க்கும் மேற்பட்டோர் ஊர்வலம்.                   வேலூர் மாவட்டம் , வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகிலிருந்து 12 பெண் ஜெயின் துறவிகள் வேலூருக்கு வருகை தந்தனர். இதனை முன்னிட்டு ஜெயின் சமுதாயத்தினர் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக பழைய பேருந்து நிலையம், பி . எஸ் . எஸ் . கோவில் தெரு , பேரிபேக்காளியம்மன் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக வந்த இந்த ஊர்வலம் ஜெயின் கோவிலை அடைந்தது. இந்த ஜெயின் பெண் துறவிகள் மூன்று மாதத்திற்கு இங்கேயே தங்கி சொற்பொழிவு ஆற்றுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

• விருபாட்சிபுரம் பகுதியில் மின்வெட்டு பொதுமக்கள் சாலை மறியல்.

Image
 ·          விருபாட்சிபுரம் பகுதியில் நள்ளிரவு மின்சாரம் பல மணி நேரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் ஆரணி - வேலூர் சாலையில் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு.         வேலூர் மாவட்டம் , விருபாட்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக அடிக்கடி மின்சாரம் நிறுத்தப்பட்டு மக்கள் கடும் அவதியடைந்து வந்தனர்.       இந்த நிலையில் இரவு மின்சாரம் முழுமையாக வராததால் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். மின்வாரியத்தை தொடர்பு கொள்ள முயன்றபோது தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் விருபாட்சிபுரம்   பகுதியில் வேலூர் – ஆரணி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.       தகவலறிந்து வந்த காவல் துறையினர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பவ இடத்திற்கு வேலூர் சட்டமன்ற உறுப்பினர் வினோத்கண்ணாவும் வ...

• வேலூரில் காமராஜர் பிறந்த நாள் .

Image
 ·          வேலூரில் காமராஜர் பிறந்த நாள் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை.           வேலூர் மாவட்டம் , வேலூர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் காமராஜர் பிறந்த நாளை கொண்டாடும் வகையில், மாவட்ட காங்கிரஸ் தலைவர் வாஹீத் தலைமையில், காங்கிரஸ் கட்சியினர் காமராஜரின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.       இதில் மாவட்ட பொருளாளர் ரகு, முன்னாள் மாவட்ட தலைவர் டீக்காராமன், வழக்கறிஞர் கிருஷ்ணகுமார், மனோகரன், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட திரளான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.    

• வேலூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் -

வேலூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சி தலைவர் .   தொழிற் கல்வி பெறுவதற்காக வேலூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் இணையதளம் மூலமாக நேரடி சேர்க்கை 01.07.2026 முதல் 31.07.2026 வரை   கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது . தொழிற் பயிற்சி நிலையத்திலேயே விண்ணப்பித்து சேர்க்கை உறுதி செய்து கொள்ளலாம் . கீழ்கண்ட தொழிற் பிரிவுகளில் மட்டுமே காலியிடம் உள்ளது . விண்ணப்பிக்க கடைசி தேதி 31.07.2026. கீழ்க்காணும் தொழிற் பிரிவுகளில் சேர குறைந்தபட்சம் 10 – ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . 1.                  TURNER         -   22 Seats Vacant 2.               MACHINIST – 06 Seats Vacant 3.               DRAUGHTS’MAN   ( CIVIL) -   04 Vacant 4.  ...