• வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் சிறார் கல்வி உதவி தொகை.
· வேலூர் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவி தொகை பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன - மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார். பாரத பிரதமரின் கல்வி உதவி தொகை (PMSS ) / ரக்சா மந்தரியின் முன்னாள் படைவீரர் நல நிதியின் கல்வி உதவி தொகை ( RMEWF) பெற தகுதி இல்லாத மற்றும் நிராகரிக்கப்பட்ட வேலூர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படை வீரர்களின் சிறார்களுக்கு தொகுப்பு நிதியிலிருந்து வழங்கப்படும் கல்வி உதவி தொகை (ECLIG) 2026-27 பெறுவதற்கான விண்ணப்பங்கள் நவம்பர் 30-ம் தேதி வரை இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகிறது. மேலும் முன்னாள் படைவீரர் மற்றும் கைம்பெண்கள் அவர்களது சிறார்களுக்கு தொகுப்பு நிதி கல்வி உதவி தொகை கோரும் நேர்வில் 01 முதல் 12-ம் வகுப்பு வரை நடப்பு ஆண்டிலும் ( Current Year ) ஏனைய படிப்புகளுக்கு நடந்து முடிந்த கல்வி ஆண்டிற்கும் விண்ணப்பித்து பயனடையுமாறும், மேலும் விவரங்களுக்கு வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அணுகுமாறும் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்....