• கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு கவிஞர் எஸ்.கே.எம்.மோகன் வாழ்த்து.
· ஞானபீட விருது பெற்ற வைடூரியம் வாழ்க - கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு கவிஞர் எஸ் . கே . எம் . மோகன் வாழ்த்து வேலூர் , ஞானபீட விருது பெற்ற கவிஞரும் , திரைப்பட பாடலாசிரியருமான கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு தமிழியக்கம் சார்பில் வி . ஐ . டி . பல்கலைகழகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது . அதில் கவிஞரும் , வேலூர் மாவட்ட மூத்த பத்திரிகையாளருமான எஸ் . கே . எம் . மோகன் கலந்து கொண்டு கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு வாழ்த்து மடல் வழங்கினார் . அதில் கூறியிருப்பதாவது ; அங்கம்மாளின் வைரத்திற்கு ஞானபீட விருது ! அளவில்லா வைரங்களையும் , முத்துக்களையும் தன் பெயரில் வைத்திருக்கும் தமிழ்ச்செம்மலுக்கு விருது ! ஞானத்தின் விழுதுக்கு இலக்கியத்தின் ஒப்பற்ற விருது ! கால் நூற்றாண்டுகளுக்கு பிறகு தமிழன் கையில் ! ஞானபீட விருதால் மகா கவிஞனுக்கு ஆனந்தம் ! கூடுதல் ஆனந்தமாக விண்ணில் இருந்து வாழ்த்தும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் க...