• ஆகஸ்ட் மாத விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்
ஆகஸ்ட் மாத விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் - வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற்றது . வேலூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 2026-ஆம் மாத விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் உரிய துறை அலுவலர்கள் பங்கேற்புடன் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலாவதாக, தமிழ்நாடு வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி, விரிஞ்சிபுரத்திலிருந்து எல்நினோ தாக்கத்தில் இருந்து வேளாண் பயிர்களை பாதுகாத்திட எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது வேளாண்மை துறையின் சார்பாக பயறு வகைகள் பற்றியும், விவசாயிகள் அடையாள பதிவு செய்து பயனடையவும், NMEO எண்ணெய் வித்துக்களின் திட்டம் மற்றும் இயற்கை விவசாயத்தின் பயன்கள் பற்றியும் விரிவாக ஆலோசனைகள் வழங்கப்பட்டது பொறியியல் துறை மூலம் 5 கார் கலப்பை மற்றும் மணிலா உடைக்கும் கருவி வழங்கிடவும், வாழை திசு வளர்ப்பு ஆய்வகம...