• காட்பாடியில் Box Cricket Turf மைதானம்.
காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக ரூ.50 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள Box Cricket Turf மைதானத்தை வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் திறந்து வைத்தார். வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக ரூ.50 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள Box Cricket Turf மைதானத்தை வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் திறந்து வைத்து, கிரிக்கெட் விளையாடி பயன்பாட்டினை தொடங்கி வைத்தார். இந்த கிரிக்கெட் மைதானத்தை பயன்படுத்துவதற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.826/- ( Including 18 % GST) என்ற கட்டணத்தை இணையதளம் வாயிலாக செலுத்த வேண்டும். மேலும் இந்த கிரிக்கெட் மைதானத்தை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதி வழங்கப்படும். பின்னர், மாவட்ட ஆட்சி தலைவர் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் உள்ள மாணவர்கள் விடுதியில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை சுவைத்து பார்த்து ஆய்வு செய்தார். மேலும், உணவிற்க...