• கிருஷ்ணசாமி பள்ளியில் மாநில விளையாட்டு போட்டிகள்.


 ·         கிருஷ்ணசாமி சீனியர் செகண்டரி பள்ளியில் சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு இடையே மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் - துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகுமார் பரிசு வழங்கி பாராட்டு.

     வேலூர் மாவட்டம், வேலூர் வள்ளல் ந.கிருஷ்ணசாமி சீனியர் செகண்டரி பள்ளியில் 'வள்ளல் கோப்பை 2026' என்ற தலைப்பில் சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு இடையே மாநில அளவிலான விளையாட்டு போட்டி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து 40 பள்ளிகளைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கால்பந்து, கைப்பந்து, எறிப்பந்து உள்பட 13 விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

   இதில் கிருஷ்ணசாமி பள்ளி டேபிள் டென்னிஸ் போட்டியில் முதல் இடத்தையும், கோகோவில் 2-ம் இடத்தையும் பிடித்தது. ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ஸ்ப்ரிங் டேஸ் பள்ளி தட்டிச் சென்றது.

     மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு பள்ளி தாளாளர் த.சிவக்குமார் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஆர்.ஜி.சுஜாதா முன்னிலை வகித்தார்.

     சிறப்பு அழைப்பாளராக துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகுமார் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கி பேசினார்.

    விழாவில் கவுரவ விருந்தினர்களாக வக்கீல் கணேஷ்காந்தி, பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மேலாளர் துர்காதேவி, ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.