Posts

• வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்

Image
·         வேலூர்   மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்ட ம் - மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்களிடம்   513     கோரிக்கை மனுக்களைப் பெற்றார். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தலைமையில்   நடைபெற்றது . மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய் துறை நிலப்பட்டா , பட்டா மாறுதல் , இலவச வீட்டு மனைப்பட்டா , முதியோர் உதவி தொகை வேளாண்மை துறை , காவல் துறை , ஊரக வளார்ச்சி துறை , நகராட்சி நி ரு வாகங்கள் , பேரூராட்சி துறை , கூட்டுறவு கடனுதவி , தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார் பாக வீடுகள் வேண்டி , மின்சார துறை சார்பான குறைகள் , மாற்று திறனாளிகள் நலத்துறை . மருத்துவ துறை , கிராம பொதுப்பிரச்சனைகள் , குடிநீர் வசதி , வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 513 மனுக்களை மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளிடமிருந்து பெற்றுக்கொண்டு சம்பந...

• விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் . அக்டோபர் 2026 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ,     16 .10.2026 வெள்ளிக் கிழமை அன்று காலை 10.30 மணியளவில் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் , மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் அமைந்துள்ள கூட்ட    அரங்கில் ( 5 வது தளம் ) நடைபெற உள்ளது . இக்கூட்டத்தில் வேளாண்மை துறை , தோட்டக்கலை துறை , வேளாண்     பொறியியல் துறை , வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை , பட்டுவளர்ச்சி துறை , மீன்வள துறை , கால்நடை பராமரிப்பு துறை , கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் , கூட்டுறவு துறை , நீர்வள ஆதார அமைப்பு , வனத்துறை , மாசுக்   கட்டுப்பாடு வாரியம் , மின்சார துறை , போக்குவரத்து துறை , பால்வள துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளார்கள் . மேலும் கடந்த மாதத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்க உள்ளார்கள் . எனவே , வேலூர் மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் கள...

• வேலூரில் “வேளாண் இயந்திரங்கள் செயல் விளக்குநர் பயிற்சி.

·           வேலூர் மாவட்டத்தில் “வேளாண் இயந்திரங்கள் செயல் விளக்குநர் பயிற்சிக்காக    கிராமப்புற இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என      மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.                 வேளாண்மைப் பொறியியல் துறை, உதவி செயற்பொறியாளர்(வே.பொ), அரசு இயந்திர கலப்பை பணிமனை பயிற்சி மையத்தில் நடைபெற உள்ள தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் வேளாண்மைப் பொறியியல் துறை இணைந்து நடத்தும் “வேளாண் இயந்திரங்கள் செயல் விளக்குநர் பயிற்சிக்காக (“Agricultural Machinery Demonstrator) கிராமப்புற இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேற்படி பயிற்சிக்கு 18 வயது முதல் 35 வயது வரை உள்ள உயர்நிலைக்கல்வி (10 th Std), தொழிற்பயிற்சி(ITI), பட்டயப்படிப்பு (Diploma) மற்றும் பட்டப்படிப்பு (Degree) பயின்றவர்களுக்கு 16 நாட்கள் பயிற்சி கட்டணம் ஏதுமின்றி பயிற்சி அளிக்கப்படுகிறது. மேற்படி பயிற்சியானது 21.10.2026 முதல் 12.11.2026 வரை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளத...

• வேலூரில் போதை பொருட்களை விற்பனை செய்தவர் கைது.

Image
 ·          வேலூரில் வீட்டில் போதை பொருட்களை பதுக்கி விற்பனை செய்த முதியவர் கைது - 28 கிலோ போதை பொருட்கள் , மதுபாட்டில்கள் பறிமுதல் .       வேலூர் - ஆரணி சாலையில், தனியார் கண் மருத்துவமனை அருகே முதியவர் போதை பொருட்கள் விற்பனை செய்வதாக வேலூர் தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது . தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி தலைமையிலான போலீசார் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினர் .             சோதனையில் முதியவர் போதை பொருட்கள் பதுக்கி   விற்பனை செய்தது தெரியவந்தது . இதைத் தொடர்ந்து அவரை போலீஸ் நிலையம் சென்று போலீசார் விசாரணை நடத்தியதில், வேலூர் வேலப்பாடியைச் சேர்ந்த ராஜேந்திரன் (64) என்பதும் , அவர் கொடுத்த தகவலின்பேரில் வீட்டில் 28 கிலோ போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரிய வந்தது.       இதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர் . பின்னர் அவரிடம் இருந்து ...

• வேலூர் கண்டோண்மெண்ட் ரயில் நிலையம் திறப்பு.

Image
·          வேலூர் கண்டோண்மெண்ட் ரயில் நிலையத்தை பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் .               வேலூர் மாவட்டம் , வேலூர் கண்டோண்மெண்ட் ரயில் நிலையம் ரூ . 8.6 கோடியில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு அதனை சென்னையிலிருந்து பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.       இந்த நிகழ்ச்சியில் 12.30 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது இதற்காக ஞாயிற்று கிழமையிலும் பள்ளி மாணவர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர் அவர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர் உள்ளிட்ட எந்த வசதிகளையும் செய்யவில்லை.              இவ்விழாவில் திருச்சி கோட்ட ரயில்வே பொது மேலாளர் பாலக்ராம்நேகி , வேலூர் மேயர் சுஜாதா, வேலூர் சட்டமன்ற உறுப்பினர் வினோத்கண்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.       இந்த விழாவில் மாவட்ட ஆட்சியருக்கு பதிலாக கலந்து கொள்ள வந்த மாவட்ட வருவாய் அலுவ...

• வேலூர் ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலய நவராத்திரி விழா.

Image
 ·          வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி விழா - முதல் நாள் அகிலாண்டீஸ்வரி அம்மன் தங்கக்கவசம் அலங்காரம் – லட்சார்ச்சணை வழிபாடு.        வேலூர் மாவட்டம் , வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி விழா துவங்கியது. முதல் நாள் உற்சவர் அகிலாண்டீஸ்வரி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு குங்கும லட்ச்சார்ச்சணைகளும், வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு யாகங்களும் நடைபெற்றது.           மூலவரான அகிலாண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்களை செய்து தங்ககவசம் அணிவித்து மகாதீபாராதனைகளும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.       இதேபோல் அகிலாண்டீஸ்வரி அலங்காரத்தில் காட்சியளித்த உற்சவர் பல்வேறு ஆரத்தி வழிபாடுகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.  

• தமிழ்நாடு வெற்றி திட்ட ஊரக பங்கேற்பு மதிப்பீட்டு பணி.

Image
வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு வெற்றி திட்டத்தின்கீழ் ஊரக பங்கேற்பு மதிப்பீட்டுப் பணி யை மாவட்ட ஆட்சி தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு. தமிழ்நாடு வெற்றி திட்டத்தின்கீழ் , வேலூர் மாவட்டத்தில் உள்ள 247 கிராம ஊராட்சிகளில் அமைந்துள்ள 2,122 குக்கிராமங்களிலும் ஊரகப் பங்கேற்பு மதிப்பீட்டின் அடிப்படையில் , 07.10.2026 முதல் பொதுமக்களின் பங்கேற்புடன் கிராமங்களின் தேவைகளைக் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக , வேலூர் மாவட்டம் , அணைக்கட்டு வட்டம், ஊசூர்   ஊராட்சியில் ஊசூர் கிராமத்தில் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் கிராமத்தின் வளர்ச்சிக்கான முன்னுரிமைகளை அடையாளம் காணும் நோக்கில் ஊரகப் பங்கேற்பு மதிப்பீட்டுப் பணி நடைபெற்றது. இப்பணியினை வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த மதிப்பீட்டின்போது , கிராமத்தில் வசிக்கும் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த பொதுமக்கள் ,   மாற்று திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர். அவர்களின் பங்களிப்புடன் சமூக வரைபடம் மற்றும் வளங்கள் வரைபடம் வரையப்பட்டு , க...