• வேலூரில் போதை பொருட்களை விற்பனை செய்தவர் கைது.


 ·         வேலூரில் வீட்டில் போதை பொருட்களை பதுக்கி விற்பனை செய்த முதியவர் கைது - 28 கிலோ போதை பொருட்கள், மதுபாட்டில்கள் பறிமுதல்.

     வேலூர் - ஆரணி சாலையில், தனியார் கண் மருத்துவமனை அருகே முதியவர் போதை பொருட்கள் விற்பனை செய்வதாக வேலூர் தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி தலைமையிலான போலீசார் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினர்.

           சோதனையில் முதியவர் போதை பொருட்கள் பதுக்கி  விற்பனை செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை போலீஸ் நிலையம் சென்று போலீசார் விசாரணை நடத்தியதில், வேலூர் வேலப்பாடியைச் சேர்ந்த ராஜேந்திரன் (64) என்பதும், அவர் கொடுத்த தகவலின்பேரில் வீட்டில் 28 கிலோ போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

     இதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து 28 கிலோ போதை பொருட்கள் மற்றும் 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

 

Comments

Popular posts from this blog

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.