• தமிழ்நாடு வெற்றி திட்ட ஊரக பங்கேற்பு மதிப்பீட்டு பணி.

  • வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு வெற்றி திட்டத்தின்கீழ் ஊரக பங்கேற்பு மதிப்பீட்டுப் பணியை மாவட்ட ஆட்சி தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு.

தமிழ்நாடு வெற்றி திட்டத்தின்கீழ், வேலூர் மாவட்டத்தில் உள்ள 247 கிராம ஊராட்சிகளில் அமைந்துள்ள 2,122 குக்கிராமங்களிலும் ஊரகப் பங்கேற்பு மதிப்பீட்டின் அடிப்படையில், 07.10.2026 முதல் பொதுமக்களின் பங்கேற்புடன் கிராமங்களின் தேவைகளைக் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், ஊசூர்  ஊராட்சியில் ஊசூர் கிராமத்தில் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் கிராமத்தின் வளர்ச்சிக்கான முன்னுரிமைகளை அடையாளம் காணும் நோக்கில் ஊரகப் பங்கேற்பு மதிப்பீட்டுப் பணி நடைபெற்றது. இப்பணியினை வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த மதிப்பீட்டின்போது, கிராமத்தில் வசிக்கும் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த பொதுமக்கள்,  மாற்று திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர். அவர்களின் பங்களிப்புடன் சமூக வரைபடம் மற்றும் வளங்கள் வரைபடம் வரையப்பட்டு, கிராமத்தில் உள்ள அடிப்படை வசதிகள், வளங்கள் மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான வசதிகள் குறித்த விவரங்கள் அடையாளம் காணப்பட்டன.

இதன் மூலம், பொதுமக்களின் நேரடிப் பங்கேற்புடன் கிராமத்தின் தற்போதைய நிலைமையை அறிந்து, தேவைகளைக் கண்டறிந்து, அவற்றுக்கு முன்னுரிமை அளித்து, கிராமத்தின் வளர்ச்சிக்கான திட்டமிடலை மேற்கொள்வதே இம்மதிப்பீட்டின் முக்கிய நோக்கமாகும்.

இந்நிகழ்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பிரியா, மகளிர் திட்ட இயக்குநர் ஜெயசுதா. உதவி இயக்குநர் (பயிற்சி, ஊரக வளர்ச்சி துறை) செல்வி காவ்யா, வட்டாட்சியர் மகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலை,  ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.விஜயகுமாரி கண்ணன்  உட்பட பலர் உடனிருந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.