Posts

• பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு நான்காம் கட்டம்

வேலூர் மாவட்டத்தில்  பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு நான்காம் கட்டம் (PHASE IV) நடைபெறவுள்ளது என  மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.                          வேலூர் மாவட்டம் பள்ளி கல்வி துறை சார்பில் 12.09.2026 அன்று பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு   வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் அறிவுரைகளின் படியும் நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு ( 2026-2028)   வ. எண். மறுகட்டமைப்பு விவரம் பள்ளிகளின் எண்ணிக்கை மறுகட்டமைப்பு   நடைபெற்ற நாட்கள் 1 50% தொடக்கப்பள்ளிகள்,   (முதற்கட்டம்) 252 12.09.2026 2 மீதமுள்ள 50% தொடக்கப்பள்ளிகள்,   (இரண்டாம் கட்டம்) 249 19.09.2026 3 அனைத்து நடுநிலைப் பள்ளிகள் 153 2...

• கீ.வ.குப்பம் வட்டத்தில் ஆட்சியர் ஆய்வு.

Image
  “ உங்களைத் தேடி உங்கள் ஊரில் ” திட்டத்தின்கீழ் வேலூர் மாவட்டம்,   கீ.வ.குப்பம் வட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர்     காலை உணவு திட்டம், பள்ளி   கட்டடம்,   ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை குறித்து   மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு. “ உங்களை தேடி உங்கள் ஊரில் ” திட்டத்தி ன்கீழ் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், கீ.வ.குப்பம்     வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண் டார். அதன் தொடர்ச்சியாக கீ.வ.குப்பம் வட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் , பள்ளி கட்டடம், ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு மேற்கொண்டார். வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் “ உங்களைத் தேடி உங்கள் ஊரில் ” திட்டத்தின்கீழ் கீ.வ.குப்பம் வட்டம், இலத்தேரி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தின்கீழ் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை சுவைத்து பார்த்து ஆய்வு செய்தார். மேலும், மாணவிகளுக்கு உணவு வழங்கப்படுவதை பார்வையிட்டு   ஆய்வு செய்து, உணவின் சுவை மற்றும் தரம் குறித்...

• வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷம்

Image
 ·          வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷம் – நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்களை செய்து வழிபாடு.           வேலூர் மாவட்டம் , வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால் , தேன் , தயிர், சந்தனம், கரும்பு சாறு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்களை செய்யப்பட்டு பின்னர் அருகம்புல் , வில்வ இலைகள், மலர் மாலைகள் ஆகியவைகளை கொண்டு சிறப்பு அலங்காரங்களை செய்து மகாதீபாராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து சாமி மேளதாளங்கள் முழங்க உட்பிரகார உலாவும் வந்தது.   இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.  

• ஐ.டி.ஐ இணைய வழி விண்ணப்பம்.

வேலூர் மாவட்டத்தில்    ஐ.டி.ஐ இடமாற்றம், டி.எஸ்.டி சுயமாக ஒப்படைத்தல் அல்லது ஐ.டி.ஐ மூடுதல், புதிய ஐ.டி.ஐ. தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்குதல், ஏற்கனவே உள்ள ஐடிஐ-களில் புதிய தொழிற்பிரிவுகள் (டிரேட்ஸ் மற்றும் யூனிட்ஸ்)    மற்றும் கூடுதல் அலகுகள் உருவாக்குவதற்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் (MSDE) கீழ் செயல்படும் பயிற்சி தலைமை இயக்ககம் (DGT) புதிய மற்றும் ஏற்கனவே உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களின் அங்கீகாரம் மற்றும் இணைப்பு தொடர்பான விதி முறைகளின் கீழ் ஐ.டி.ஐ இடமாற்றம், டி.எஸ்.டி சுயமாக ஒப்படைத்தல் அல்லது ஐ.டி.ஐ மூடுதல், புதிய ஐ.டி.ஐ. தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்குதல், ஏற்கனவே உள்ள ஐடிஐ-களில் புதிய தொழிற்பிரிவுகள் (டிரேட்ஸ் மற்றும் யூனிட்ஸ்) மற்றும் கூடுதல் அலகுகள் உருவாக்குவதற்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம். தகுதியுடைய நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் டி.ஜி.டி–யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://affiliation-dgt.skillindiadigital.gov.in/ - இல் மட...

• சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர் பதிவு.

வேலூர் மாவட்டத்தில்   சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு   வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை பெற   சீர்மரபினர் இனத்தை சார்ந்தவர்கள் நல வாரியத்தில்   இணையதளம் மூலம்   பதிவு செய்து பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.   சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கீழ்கண்ட நலத்திட்ட உதவிகள் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.   1 விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை ரூ.1,25,000/- வரை 2 இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை ரூ.30,000/- 3 ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை ரூ.5,000/- 4 கல்வி உதவித்தொகை ரூ.1,000/- முதல் ரூ.8,000/- வரை 5 திருமண உதவித்தொகை ரூ.3,000/- (அ) ரூ.5,000/- 6 மகப்பேறு உதவித்தொகை ரூ.6,000/- 7 மூக்குக் கண்ணாடி செல...