• ஐ.டி.ஐ இணைய வழி விண்ணப்பம்.
- வேலூர் மாவட்டத்தில் ஐ.டி.ஐ இடமாற்றம், டி.எஸ்.டி சுயமாக ஒப்படைத்தல் அல்லது ஐ.டி.ஐ மூடுதல், புதிய ஐ.டி.ஐ. தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்குதல், ஏற்கனவே உள்ள ஐடிஐ-களில் புதிய தொழிற்பிரிவுகள் (டிரேட்ஸ் மற்றும் யூனிட்ஸ்) மற்றும் கூடுதல் அலகுகள் உருவாக்குவதற்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் (MSDE) கீழ் செயல்படும் பயிற்சி தலைமை இயக்ககம் (DGT) புதிய மற்றும் ஏற்கனவே உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களின் அங்கீகாரம் மற்றும் இணைப்பு தொடர்பான விதி முறைகளின் கீழ் ஐ.டி.ஐ இடமாற்றம், டி.எஸ்.டி சுயமாக ஒப்படைத்தல் அல்லது ஐ.டி.ஐ மூடுதல், புதிய ஐ.டி.ஐ. தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்குதல், ஏற்கனவே உள்ள ஐடிஐ-களில் புதிய தொழிற்பிரிவுகள் (டிரேட்ஸ் மற்றும் யூனிட்ஸ்) மற்றும் கூடுதல் அலகுகள் உருவாக்குவதற்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.
தகுதியுடைய நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் டி.ஜி.டி–யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://affiliation-dgt.skillindiadigital.gov.in/-இல் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்த இணையதளமானது வருகின்ற 31.10.2026 வரை மட்டுமே செயல்படும். எனவே, தகுதியுடையவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment