கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு. வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் நாற்றாங்கால் பண்ணை, ஆரம்ப சுகாதார நிலையம், சத்துணவு கூடம், சத்துமாவு உற்பத்தி மையம், பயனாளியின் வாழை தோட்டம் ஆகிய இடங்களில் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் ஆய்வு மேற்கொண்டார். வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம், பாலாத்துவண்ணான் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் ரூ.63.71 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நாற்றாங்கால் பண்ணையை பார்வையிட்டு ஆய்வு செய்து, பண்ணையில் பணிபுரிபவர்களிடம் பணி நேரம், அடிப்படை வசதிகள், நாற்றாங்கல் பண்ணை பராமரிப்பு குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, கீழ் அரசம்பட்டு ஊராட்சியில் மகளிர் சுய உதவி குழுக்களின் சத்துமாவு உற்பத்தி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, சத்து...