• கணியம்பாடி ஒன்றிய திட்ட பணிகள் ஆய்வு.
- கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு.
வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் நாற்றாங்கால் பண்ணை, ஆரம்ப சுகாதார நிலையம், சத்துணவு கூடம், சத்துமாவு உற்பத்தி மையம், பயனாளியின் வாழை தோட்டம் ஆகிய இடங்களில் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் ஆய்வு மேற்கொண்டார்.
வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம், பாலாத்துவண்ணான் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் ரூ.63.71 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நாற்றாங்கால் பண்ணையை பார்வையிட்டு ஆய்வு செய்து, பண்ணையில் பணிபுரிபவர்களிடம் பணி நேரம், அடிப்படை வசதிகள், நாற்றாங்கல் பண்ணை பராமரிப்பு குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து, கீழ் அரசம்பட்டு ஊராட்சியில் மகளிர் சுய உதவி குழுக்களின் சத்துமாவு உற்பத்தி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, சத்துமாவு உற்பத்தி செய்யும் முறையை கேட்டறிந்தார். சத்துமாவை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உற்பத்தி செய்யுமாறும், சந்தைப்படுத்துதலை விரிவுப்படுத்தவும் அறிவுறுத்தினார்.
அதனை தொடர்ந்து, கீழ்அரசம்பட்டு ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதாரம் திட்டம் சார்பில் சமுதாய முதலீட்டு நிதியில் ரூ.1 இலட்சம் கடனுதவியில் செவ்வந்தி மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் பயனாளி பயிரிடப்பட்டுள்ள வாழை தோட்டத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்
பின்னர், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் கீழ்அரசம்பட்டு ஊராட்சியில் ஒருங்கிணைந்த பண்ணை தொகுப்பிலிருந்து ரூ.1.50 இலட்சம் கடனுதவியின் மூலம் வாழ்வாதார சேவை மையத்தை திறந்து வைத்து, இப்பகுதியில் வட்டார வணிக வள மையத்தின் மூலம் ரூ.50,000/- கடனுதவியில் பயனாளி அமைக்கப்பட்டுள்ள கால்நடை தீவன பொருட்களின் கடையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்
தொடர்ந்து, கத்தாழம்பட்டு ஊராட்சியில், ரூ.1.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டுமான பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலருக்கு அறிவுறுத்தினார்.
அதனை தொடர்ந்து, துத்திக்காடு ஊராட்சியில் மழைநீர் கால்வாயில் 20 அடி ஆழமுள்ள நீர் உறிஞ்சி கிணற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், சாத்துமதுரை ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியை பார்வையிட்டு, சத்துணவு சமையற்கூடத்தில் உணவு பொருட்களின் இருப்பு மற்றும் தரத்தை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மகளிர் திட்ட இயக்குநர் ஜெயசுதா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமால், வேலூர் வட்டாட்சியர் உதயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி உட்பட பலர் உடனிருந்தனர்.


Comments
Post a Comment