Posts

Showing posts from October, 2025

• விஐடி உதவி துணைதலைவர் ஆதரவற்றோர்க்கு இனிப்பு, பட்டாசுகளை வழங்கல்.

Image
 ·          விஐடி உதவி துணைதலைவர் காதம்பரி எஸ் . விசுவநாதன் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு , பட்டாசுகளை வழங்கினார்       தீபாவளி பண்டிகையை முன்னிட்டு , வேலூர் மற்றும் குடியாத்தம் பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் மற்றும் முதியோர்களுக்கு விஐடி பல்கலைகழகத்தின்   உதவி துணைதலைவர்   காதம்பரி எஸ் . விசுவநாதன் மற்றும் டாக்டர் ஏ . ஷ்ரவன் கிருஷ்ணா உள்ளிட்டோர் இனிப்பு , பட்டாசு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினர் .       காட்பாடியை அடுத்த கசம் பகுதியில் உள்ள முதியோர் பாலர் குடும்ப கிராம பண்ணை ஆதரவற்றோர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுமண தம்பதிகளான விஐடி பல்கலைகழக உதவி துணைதலைவர் காதம்பரி எஸ் . விசுவநாதன் , டாக்டர் ஏ . ஷ்ரவன் கிருஷ்ணா ஆகியோர் வேலூர் மற்றும் குடியாத்தம் பகுதிகளில் உள்ள 20 - க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் , இனிப்புகள் , பட்டாசுகள் மற்றும் முதியோர் ...

• "கலை ரத்னா" விருது.

Image
·          " கலை ரத்னா " விருது.         புதுவை அரசு கலைமாமணி சங்கம் நம்முடைய டாக்டர் ஐடாஸ்கடர் அன்புக்கரங்கள் அறக்கட்டளை செயற்குழு உறுப்பினர் கவிஞர் D. ரெஜி மற்றும் பேராசிரியர் P. இன்பஎழிலன் ஆகியோருக்கு " கலை ரத்னா " விருது வழங்கி வாழ்த்தினர். டாக்டர் ஐடாஸ்கடர் அன்புக்கரங்கள் அறக்கட்டளை சார்பில் வாழ்த்துக்களை பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் .    

• ஊசூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு விபத்தில்லா தீபாவளி.

Image
 ·          ஊசூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு விபத்தில்லா தீபாவளி மகிழ்ச்சியான தீபாவளி செயல்விளக்கம்       வேலூர் மாவட்டம், ஊசூர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வேலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தின் சார்பில் தீ விபத்தில்லா தீபாவளி   விழிப்புணர்வு செயல்விளக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது .                   நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கே . சீனிவாசன் தலைமை தாங்கினார் .    நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முனைவர் சி . சுதாகர் வரவேற்றார் .    சிறப்பு அழைப்பாளராக ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பின் முன்னாள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் செ . நா . ஜனார்த்தனன் கலந்து கொண்டு பேசினார்                   வேலூர் தீயணைப்பு நிலையத்தின் வீரர்கள் ஜெ . அரிஓம் , பி . அஜித்குமார் எ . பிரகாஷ் , எஸ...

• முடி திருத்தும் தொழிலாளர்களுக்கான மருத்துவ முகாம்.

Image
·          முடி திருத்தும் தொழிலாளர்களுக்கான மருத்துவ முகாம் - நலத்திட்ட உதவிகள். ·        மனிதநேயம், ஆரோக்கியம், வாழ்க்கைக்கு முக்கியம் - வி . ஐ . டி. துணைதலைவர் டாக்டர் ஜி . வி . செல்வம் வலியுறுத்தல்        வேலூரில் உள்ள தலைமுறை பேரவை மற்றும் நாராயணி மருத்துவமனை ஆகியவை இணைந்து வி . ஐ . டி. துணைதலைவர் டாக்டர் ஜி . வி . செல்வம் பிறந்த நாள் விழாவை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் போன்று, இந்த ஆண்டும் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு மருத்துவர் சமூக நலசங்கம், முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்க உறுப்பினர்களுக்கான மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் வேலூர் உள்ள காவலர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது .                  முகாமுக்கு நாராயணி குழும நிறுவனங்களின் இயக்குனர் என் . பாலாஜி தலைமை தாங்கினார் . தமிழ்நாடு மருத்துவர் சமூக நல ...

• நறுவீ மருத்துவமனை ரோபோ மூலம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை சாதனை.

Image

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.

Image
  ·          வேலூர் வாசகர் வட்டம் சார்பில் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் 94- வது பிறந்த நாள் விழா. ·          பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வேலூர் மாமன்ற உறுப்பினர் பாபிகதிரவன் பரிசு வழங்கி பாராட்டு . ·          அப்துல்கலாம் திருஉருவப் படம் வழங்கி கவிஞர் முனைவர் ச.இலக்குமிபதி புகழாரம்.       டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம்-ன் 94- வது பிறந்த நாள் விழா வேலூர் வாசகர் வட்டம் சார்பில் வேலூர் அரசு முஸ்லிம் மேல்நிலை பள்ளியில் வெகு சிறப்பாக, உற்சாகமாக, மாணவர்களுடன் கொண்டாடப்பட்டது. விழாவில் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் திருஉருவப் படத்தை, பள்ளி தலைமை ஆசிரியரிடம் கவிஞர் முனைவர் ச.இலக்குமிபதி வழங்கினார்.        டாக்டர் ஏபிஜே. அப்துல்கலாம் இந்தியாவின் 11-ஆவது ஜனாதிபதி.   ராமேஸ்வரத்தில் பிறந்தவர். டாக்டர் அப்துல்கலாம் சிறந்த கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், விஞ்ஞானி, ஆசிரியர்.   பொக்ராணில் அணுகுண்டு வெடிப்பதற்கு க...

• Q.S. உலக பல்கலைகழக தர வரிசையில் விஐடி பல்கலை 142-வது இடம்.

Image
 ·          Q.S. உலக பல்கலைகழக தர வரிசையில் விஐடி பல்கலை 142வது இடம்.    ·   அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை சார்பில் 10,000 மாணவர்களுக்கு ரூ.12 கோடி உதவிதொகை -          விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தகவல்.              கிராமப்புற ஏழை மாணவர்கள் உயர்கல்வி பெறும் வகையில் ஸ்டார்ஸ் திட்டத்தில் 102 மாணவர்களுக்கு இலவச கல்வியும்,   அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை சார்பில் 10 ஆயிரம் மாணவர்களுக்கு ரூ.12 கோடி உதவிதொகை வழங்கப்பட்டுள்ளது என விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் கூறினார்.              இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:              கல்வி மூலம்தான் ஒரு நாடு வளர முடியும். இந்தியா வளர வேண்டும், தமிழகம் வளர வேண்டும்.              அந்த வகையில்...