• வேடிக்கை மனிதர்களை போல சாக கூடாது
வேடிக்கை மனிதர்களை போல சாக
கூடாது - மண் பயனுற வாழ வேண்டும்.
- மகாகவி பாரதியின் நினைவு நாளில் கவிஞர் முனைவர் ச.இலக்குமிபதி.
வேலூர் மாவட்டம், வேலூர் வாசகர் வட்டத்தின் சார்பில் மகாகவி பாரதியின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பாரதி புக் ஹவுஸ்-ல் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பாரதி புக் ஹவுஸ் உரிமையாளர் உமா தலைமை தாங்கினார். வேலூர் வாசகர் வட்டத்தின் சார்பில் எம். காமராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் வேலூர் வாசகர் வட்ட செயலாளர் கவிஞர் முனைவர் ச.இலக்குமிபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாரதியாரின் நினைவுகள் குறித்து பகிர்ந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினர் கவிஞர் லட்சுமிபதி பேசும்போது,
எட்டயபுரத்து எரிமலை கவிஞரான மகாகவி பாரதியார் “யாருக்கும் எதற்கும் அஞ்சாமல் வாழ்வை எதிர் கொள்ள வேண்டும்” என்கிற உணர்வை ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மக்கள் மனங்களில் விதைத்தவர்.
“அச்சமில்லை அச்சமில்லை உச்சி மீது வான் இடிந்து விழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை” என்று பாடியவர். “காக்கை குருவி நம் ஜாதி” என்பதை கற்றுக் கொடுத்தவர்.
மகாகவி பாரதியின் புதிய ஆத்திச்சூடியை இளைஞர்கள் படித்தால் நிச்சயம் ஒரு நேர்கொண்ட பார்வையும் யாருக்கும் நிலத்தில் அஞ்சாத தன்மையும் கொண்டு வாழ முடியும் என்றும், தன்னம்பிக்கையோடு வாழ்ந்தால் எதுவும் சாத்தியம் என்பதை புரிந்து கொள்வார்கள் என்றும்
மகாகவி பாரதியாரின் தேசிய பாடல்கள், பெண் விடுதலை பாடல்கள், சமூக உணர்வு பாடல்கள், பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு போன்றவை மிக முக்கியமானவை என்றும்,
“பல வேடிக்கை மனிதர்களை போல நாம் சாகக்கூடாது. மண் பயனுற வாழவேண்டும்”, மனதில் உறுதி வேண்டும்” என்றெல்லாம் மகாகவி பாரதி பாடல்களை மேற்கோள்களை காட்டி சிறப்பாக பேசினார்.
சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட கவிஞர் எஸ்.கே.எம். மோகன் மகாகவி பாரதியார் மறைந்தது 1921-ம் ஆண்டு செப்டம்பர் மாதம். ஆனால் 2026-ல் இன்றைக்கும் அவரது புகழை பேசுகிறோம் என்றால் அதற்கு காரணம், அவர் இந்த சமூகத்திற்கும், இளைஞர்களுக்கும் கவிதை மூலம் ஆற்றிய உயர்ந்த பணிகள்தான். இன்றைய ஜென்சி இளைஞர்கள் நிச்சயமாக மகாகவி பாரதியை படிக்க வேண்டும். மகாகவி பாரதியார் எழுதிய எளிய தமிழை படிக்கிறபோது தமிழ் உணர்வும், இன உணர்வும், தன்மான உணர்வும் தானாக வந்துவிடும் என்றார்.
தொடர்ந்து பாரதி புத்தக மற்றும் பதிப்பகம் உரிமையாளர் உமா பேசுகிறபோது, தனக்கு மிகவும் பிடித்த கவிஞர் பாரதி என்றும், அதனால்தான் அவர் பெயரை வைத்து இந்த புத்தக நிறுவனத்தினை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
நிறைவாக நக்கீரன் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மூத்த பத்திரிக்கையாளர் பொறியாளர் வி.டி.சிவமூர்த்தி, இம்பீரியல் பஸ் உரிமையாளர் ஸ்ரீதர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சிறப்புங்க சார். நிகழ்வை முன்னெடுத்து உமாவுக்கு பாராட்டுக்கள் 💐💐
ReplyDelete