• வேலூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு கூட்டம்.
- வேலூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் குழுவின் தலைவர் / வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில், உறுப்பினர் செயலர்/ மாவட்ட ஆட்சி தலைவர் முன்னிலையில் நடைபெற்றது.
வேலூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் குழுவின் தலைவர் / வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த் தலைமையில், உறுப்பினர் செயலர் / மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டம், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம், மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டம், பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் குறித்தும், விற்பனை குழு சார்பில் மின்னணு தேசிய வேளாண் சந்தை (e-Nam) குறித்தும், வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டம், அறுவடை பின்சார் தொழில்நுட்ப கருவிகள், வேளாண்மை இயந்திரமயமாக்குதலுக்கான துணை இயக்க திட்டம், சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள், சூரிய கூடார உலர்த்திகள், சூரிய சக்தி மின் வேலி, பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்துதல் திட்டம், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், ஒருங்கிணைந்த சேவை மையம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத்திட்டம், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா, தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், வளர்ச்சி அடைந்த பாரதம்-கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம் (VBG-RAMG), ஜல் ஜீவன் மிஷன் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், பிரதம மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் திட்டம், தூய்மை பாரத இயக்கம், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம், 15 வது மத்திய நிதிக்குழு மான்யம், தேசிய கிராம சுயாட்சி திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், மகப்பேறு நிதியுதவி, ஜனனி சுரக்ஷா யோஜனா, ஜனனி சிசு சுரக்ஷா காரியக்ரம், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம், தேசிய சுகாதார திட்டம், பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா, ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன், பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா ஆயுள் காப்பீட்டுத் திட்டம், அடல் பென்ஷன் யோஜனா, சுகன்யா சம்ரித்தி கணக்கு திட்டம்/செல்வமகள் சேமிப்புத் திட்டம், அடல் பென்ஷன் யோஜனா, பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா, தேசிய கால்நடை நோய்கட்டுப்படுத்தும் திட்டம், தேசிய கால்நடைகள் நலன் மற்றும் நோய் கட்டுப்படுத்தும் திட்டம், ராஷ்ட்ரிய கோகுல்மிஷன், ஆவின்-NADP-NPDD, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி (SSA), மறு சீரமைக்கப்பட்ட மின் விநியோகத் திட்டம், பிரதான் மந்திரி ஆதார்ஷ் கிராம யோஜனா, சுகம்யா பாரத் அபயன், மாற்று திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை, சீர்மிகு நகர திட்டம், அம்ரூத் 2.0, தூய்மை பாரத இயக்கம் 2.0, அம்ரூத், பிரதம மந்திரி தெரு வியாபாரிகள் சுய சார்பு நிதி, தனிநபர் கழிப்பிடம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், தேசிய சுகாதார திட்டம், பழுதுபார்த்தல், புதுப்பித்தல் மற்றும் புனரமைத்தல், தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவி தொகை திட்டம், கேலோ இந்தியா, e-shram portal, பிரதம மந்திரி கனிஜ் சேஷத்ர கல்யாண் யோஜனா திட்டம், மாவட்ட கனிம அறக்கட்டளை நிதி / பிரதான் மந்திரி கனிஜ் சேஷத்ரா கல்யாண் யோஜனா திட்டம், National Career Service (NCS) Portal, வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண நிதி, பிரதான் மந்திரி அனுசுச்சித் ஜாதி அபியுதய் யோஜனா குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
மேலும், ஒவ்வொரு துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் தற்போதைய நிலை, இலக்குகள், நிதி ஒதுக்கீடு மற்றும் செலவினம், திட்டங்களின் முன்னேற்றம், பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், அனைத்து துறைகளின் முதல் நிலை அலுவலர்களும் கலந்து கொண்டு, தங்களது துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் மத்திய அரசு மற்றும் மத்திய–மாநில அரசுகளின் நிதி உதவியுடன் கூடிய திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் செயல்படுத்தப்பட்ட பணிகள் தொடர்பான விவரங்களை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடம் விரிவாக எடுத்துரைத்தனர்.
இக்கூட்டத்தில் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன், மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.து.சுரேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பிரியா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, மாநகராட்சி துணை மேயர் மா.சுனில்குமார், மகளிர் திட்ட இயக்குநர் ஜெயசுதா, மாநகராட்சி ஆணையாளர் அ.சுல்தானா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment