• வேலூரில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

·         வேலூரில் ஸ்டேட் வங்கி எதிரில் வங்கி ஊழியர்கள் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

    வேலூர், அண்ணா சாலையில் உள்ள ஸ்டேட் வங்கி எதிரில் வங்கி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

            ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் மில்டன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை நாளாக அறிவிக்க வேண்டும். தற்போதைய பணிச்சுமையை சமன் செய்யும் வகையில் கூடுதல் பணியாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்.

       நீண்ட நேரம் பணிபுரிவதற்கான கூடுதல் ஊதியம் மற்றும் இதர சலுகைகளை முறைப்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

            இதில் வங்கி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.