• தெள்ளை கிராமத்திற்கு புதிய வழித்தடப் பேருந்து சேவை.
- தெள்ளை கிராமத்திற்கு புதிய வழித்தடப் பேருந்து சேவை - வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தொடங்கி வைத்தார்..
வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம், துத்திக்காடு ஊராட்சிக்குட்பட்ட தெள்ளை கிராமத்திற்கு புதிய வழித்தடப் பேருந்து சேவையை மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தொடங்கி வைத்தார்.
வேலூர் மாவட்டம், வேலூர் பழைய பேருந்து நிலையத்தில்லிருந்து சுமார் 24 கிலோமீட்டரில் அமைந்துள்ள தெள்ளை சாலையிலிருந்து 7 கிலோமீட்டர் வனப்பகுதியில் தொலைவில் அமைந்துள்ள தெள்ளை குக்கிராமத்தில் 70 குடும்பங்களை சார்ந்த சுமார் 250 மக்கள் வசித்து வருவதாகவும், இச்சாலை பேருந்து இயக்க போதுமான அளவு உள்ள காரணத்தால் பொதுமக்கள் வாழ்வாதாரம் உயர்த்தும் வகையில் புதிய பேருந்து வழித்தடம் அமைத்து பேருந்து இயக்க ஆட்சி தலைவர் வழிவகை செய்து தருமாறு கேட்டு கொண்டுள்ளார்கள்.
அதன்பேரில் பேருந்து எடுத்து சென்று கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கள ஆய்வில் பேருந்தை இயக்க சாலை போதுமான அளவு உள்ள காரணத்தால் கொணவட்டம்-1 பணிமணை நகர வழித்தடம் T/D வழித்தடம் காலை மற்றும் மாலை பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காட்பாடி - தெள்ளை இயக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
|
வ.எண். |
காலை பேருந்து எண்-TOWN/D |
மாலை பேருந்து எண்-TOWN/D |
||
|
1 |
06.00AM |
காட்பாடியிலிருந்து புறப்படுதல் |
03.00PM |
காட்பாடியிலிருந்து புறப்படுதல் |
|
2 |
07.45AM |
தெள்ளை சென்றடைதல் |
04.45PM |
தெள்ளை சென்றடைதல் |
|
3 |
07.50AM |
தெள்ளையிலிருந்து புறப்படுதல் |
04.45PM |
தெள்ளையிலிருந்து புறப்படுதல் |
|
4 |
09.10AM |
வேலூர் பழைய பேருந்து நிலையம் சென்றடைதல் |
06.10PM |
வேலூர் பழைய பேருந்து நிலையம் சென்றடைதல் |
மேற்படி காட்பாடி தெள்ளை வழித்தடத்தில் இப்பேருந்து இயக்கும்பட்சத்தில் சுமார் 70 குடும்ப தெள்ளை வாழ் மக்கள் மற்றும் நஞ்சு கொண்டாபுரம், கீழ்அரசம்பட்டு, பாலம்பாக்கம் மற்றும் கணியம்பாடி மக்கள் பயன்பெறுவார்கள்
இந்நிகழ்ச்சியில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் த.வேலழகன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, கணியம்பாடி ஒன்றிய குழு துணைதலைவர் கஜேந்திரன், துணை மேலாளர் (வணிகம்) திருமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment