• வேலூரில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்.
· வேலூரில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தை கிருஷ்ணகிரிக்கு மாற்றுவதை கண்டித்து வேலூரில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்.
வேலூர் மாவட்டம், வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரில் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களின் சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.
இந்த உண்ணாவிரதத்தில் வேலூர், ராணிப்பேட்டை, காட்பாடி, குடியாத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த உண்ணாவிரததில் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் பாலசந்திரன், பார்த்திபன், பாஸ்கர், சுதாகர், வெற்றி, உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் வேலூரில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தை கிருஷ்ணகிரிக்கு மாற்ற கூடாது என முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஞானசேகரன், வழக்கறிஞர் முகமதுசகி, அதிமுக மாவட்ட செயலாளர் அப்பு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இதில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் கலந்து கொண்டு பேசுகையில், கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் நுகர்வோர் நீதிமன்ற தேவைகளை பூர்த்தி செய்வார்கள். பாமர மக்களும் நீதியை பெற்றனர். எத்தனையோ விசித்திரமான வழக்குகள் முடிக்கப்பட்டு மக்களுக்கு நீதி வழங்கியுள்ளனர். ஆனால் எந்தவித முன் அறிவிப்புமின்றி 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிருஷ்ணகிரிக்கு நுகர்வோர் நீதிமன்றத்தை மாற்றியுள்ளனர்.
ஆனால் இன்றைக்கு மத்திய அரசானாலும், மாநில அரசானாலும் மக்களை தேடி செல்ல வேண்டும். கடந்த ஆட்சியில் நாங்கள் மக்களை தேடி சென்றோம். ஒரு காலத்தில் நடமாடும் நீதிமன்றம் இருந்தது. மக்களுக்காகதான் திட்டங்கள். இவை மாற்றியமைக்கப்பட்டு கிருஷ்ணகிரி செல்ல வேண்டுமென்றால் என்ன காரணம்? ஒவ்வொரு மாவட்டத்திலும் நுகர்வோர் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்பது சட்டம். அதனை புறந்தள்ளிவிட்டு எதற்காக கிருஷ்ணகிரிக்கு எடுத்து செல்கிறீர்கள்?
தமிழக சட்டமன்றத்தில் இது குறித்து எழுப்பிய கேள்விக்கு, தமிழக அரசு பதில் அளித்தது அமைச்சர் சொன்னது, எங்களுக்கு வரும் புகார்கள் குறைந்ததன் அடிப்படையில் கிருஷ்ணகிரிக்கு கொண்டு செல்கிறோம் என சொல்கிறார். வழக்குகள் குறைந்தால் நீதிமன்றத்தை மூடிவிடுவீர்களா? நீதிமன்றத்தில் புகார் இல்லையென்றால் அதனை மூடிவிடுவீர்களால்? தீ விபத்து நடக்கவில்லை என்றால் தீயணைப்பு நிலையத்தை மூடி விடுவீர்களா? என்ன நியாயம் இது? தவெக அரசின் செயலா என இதனை மக்களிடம் கொண்டு செல்லும்போது மக்கள் இதனை பார்த்து கேலி செய்கிறார்கள் என பேசினார்.

Comments
Post a Comment