• வேலூரில் திராவிடர் கழகத்தினர் ஆர்பாட்டம்


 ·         வேலூரில் ஆட்சியர் அலுவலகம் எதிரில் மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதி வாரி கணக்கெடுப்பை நீக்கிட சூழ்ச்சி செய்வதை கண்டித்து திராவிடர் கழகத்தினர் ஆர்பாட்டம்.

     வேலூர் மாவட்டம், வேலூர், சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் திராவிட கழகத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.

    இதில் மாநில அமைப்பாளர் அன்பரசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு துவங்கி வைத்தார். இதில் மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதி வாரி கணக்கெடுப்பை நீக்கிட சூழ்ச்சி செய்கிறது. ஜாதி வாரி கணக்கெடுப்பில் குழப்பத்தை ஏற்படுத்தவும் மத்திய அரசு முயல்வதால், இதனை கண்டித்து இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது.

   சமூக நீதியை காத்திட ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த கோரி முழக்கங்களை எழுப்பினர். இதில் திரளான தி.க.-வினர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.