• வேலூர், தொரப்பாடியில் வித்தியாசமான பள்ளி கூட விநாயகர்.

·         வேலூர் கோட்டை ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகங்கள் சந்தனகாப்பு அலங்காரங்கள் செய்து வெள்ளி கவசம் அணிவித்து விநாயகருக்கு மஹாதீபாராதனை.

·         வன்னி மரத்தடி விநாயகருக்கு சிறப்பு அலங்காரங்கள் தீபாராதனை. 

·         வேலூர், தொரப்பாடியில் வித்தியாசமாக பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி கூடத்திலும், வாக்குசாவடியிலும் விநாயகர் உள்ளதை போலும் மேலும் மஹாவிஷ்ணு-வை போல் பிரம்மாண்ட விநாயகர் வைத்து வழிபாடு.

            வேலூர் மாவட்டம், வேலூர், கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயக பெருமானுக்கு பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது. சிறப்பு யாகம் செய்து புனித கலச நீரை ஊற்றி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள், சந்தனகாப்பு அலங்காரங்கள் செய்து வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு மஹாதீபாராதனைகள் நடைபெற்றது.

     தொடர்ந்து ஆலய வளாகத்தில் வன்னி மரத்தடியில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்களை செய்து மகாதீபாராதனை நடைபெற்றது. சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

            இதேபோன்று வேலூர், தொரப்பாடி, பாலாஜி நகரில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி போன்று வடிவமைத்து பொதுமக்கள் சார்பில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, அனைவரும் கல்வி கற்க வேண்டும், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல், விவசாயத்தை காப்போம் என பள்ளி போன்று வடிவமைத்து அதனுள் மாணவர் விநாயகர், வாக்கு செலுத்தும் விநாயகர், வாக்குசாவடி அலுவலர் விநாயகர், ராணுவ வீரர் விநாயகர் என பல வடிவ விநாயகர் சிலைகளை வைத்துள்ளனர். இதனை திரளான மக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு சென்றனர். மேலும் மஹாவிஷ்ணுவை போல் லிங்கத்தை கையில் வைத்து படுத்துகொண்டு அருள் புரியும் விநாயகரையும் மக்கள் பார்த்து வழிபட்டு சென்றனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.