• வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.
- வேலூர் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் ஆய்வு.
வேலூர் மாவட்டத்தில் மருத்துவமனை, மழைநீர் வடிகால் பணி, சமூக நீதி மாணவியர் விடுதி, நகர்ப்புற நலவாழ்வு மையம், நியாய விலை கடை ஆகிய இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் மரு.ச.உமா ஆய்வு மேற்கொண்டார்.
வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் பெண்ட்லண்ட் அரசு வேலூர் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், மருத்துவமனையில் “தாய் மாமன் தங்க மோதிரம்” திட்டத்தின்கீழ் வழங்கப்படவுள்ள மோதிரங்களை பாதுகாத்து வைக்கும் பாதுகாப்பு பெட்டகம் அறையை (Safety Locker Room) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து வேலூர் மாநகராட்சி, முத்துமண்டம் நீர்த்தேக்க தொட்டி பகுதியில் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.46 இலட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் அமைக்கும் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட வண்டறந்தாங்கல் பகுதியில் ரூ.250 இலட்சம் மதிப்பில் 1560 மீ நீளத்திற்கு கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இப்பணி வண்டறந்தாங்கல் ஏரி முதல் குடியாத்தம் சாலை வரை உள்ள வண்டறந்தாங்கல் மெயின் ரோடு (035001R005), இந்திரா நகர் 2-வது குறுக்குத் தெரு (035001R0843), இடுகாடு சாலை (035001R0837) மற்றும் பெரியபட்டரை தெரு (035005R181) ஆகிய பகுதிகளில் மூடி அமைப்புடன் கூடிய மழைநீர் வடிகால் (RCC Storm Water Drain with Cover Slab) கட்டப்பட்டு வருகிறது. இக்கால்வாய் அமைக்கப்படுவதன் மூலம் வண்டறந்தாங்கல் ஏரி முதல் குடியாத்தம் சாலை வரை மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு மற்றும் மழைநீர் தேங்குதல் ஆகியவற்றிற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையில், போதுமான நீர் வெளியேற்றத் திறன், சீரான சரிவு மற்றும் தேவையான கட்டமைப்பு உறுதித்தன்மையுடன் புதிய RCC மழைநீர் வடிகால் மூடியுடன் அமைக்கபட்டு வருகிறது.
வடிகாலின் உள் அகலம் 0.70 மீட்டர், ஆழம் 0.90 மீட்டர் ஆகும். நீரியல் கணக்கீட்டின்படி தேவையான அதிகபட்ச நீர்வெளியேற்றம் 0.44 கன மீட்டர்/வினாடி ஆகும். முன்மொழியப்பட்ட வடிகாலின் கணக்கிடப்பட்ட நீர்வெளியேற்றத் திறன் சுமார் 0.47 கனமீட்டர்/வினாடி ஆக இருப்பதால், வடிவமைக்கப்பட்ட நீர்வெளியேற்றத்தை போதுமான அளவில் கையாளும் திறன் கொண்டதாக இருக்கும்.
பின்னர் வேலூர் மாவட்டம், காட்பாடியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின்கீழ் செயல்படும் சமூக நீதி மாணவியர் விடுதியை பார்வையிட்டு ஆய்வு செய்து, மாணவிகளிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து வேலூர் மாநகராட்சி, முத்துமண்டபம் அருகில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், மருந்தகத்தில் மருந்துகளின் இருப்பு குறித்து ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து வேலூர் மாநகராட்சி, காட்பாடியில் உள்ள நியாய விலை கடையை பார்வையிட்டு, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். மேலும், இப்பகுதியில் பொதுமக்களிடம் குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் காட்பாடி வட்டம், சேர்க்காடு அரசு மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு செய்து, மருத்துவரிடம் புறநோயாளிகள் வருகை விவரம், சிகிச்சை முறைகள், மருந்துகள் இருப்பு குறித்து கேட்டறிந்தார். மேலும், பொதுமக்களிடம் முறையாக சிகிச்சை வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.
தொடர்ந்து காட்பாடி வட்டம், சேர்க்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின்போது புறநோயாளிகள் வருகை பதிவேடு, மருந்துகள் இருப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் மின்னனு பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருவதை காட்பாடி வட்டம், பிரம்மபுரம் ஊராட்சியில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வேலூர் மாவட்டத்தில் மின்னனு பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் நடப்பு பருவத்தில் வேளாண்மை மற்றும் சகோரத துறை அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்களால் இப்பணி செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு பருவத்தில் 7 வேளாண்மை அலுவலர்கள், 6 தோட்டக்கலை அலுவலர்கள், 5 துணை வேளாண்மை அலுவலர்கள் கண்காணிப்பில் 42 வேளாண் விரிவாக்க அலுவலர்கள் , 6 வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள், 14 உதவி வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள் , 3 பயிர் அறுவடை பரிசோதனையாளர்கள் மற்றும் 36 தன்னார்வலர்கள் ஆக மொத்தம் 119 பேர் பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு நாளது தேதி வரை 552068 இலக்கிற்கு 191272 சர்வே எண்களில் சாகுபடி விவரம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. குறைவாக சாதனை அடைய பெற்றுள்ள அணைக்கட்டு, காட்பாடி, பேர்ணாம்பட்டு வட்டாரங்களுக்கு வட்டார அளவில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு மின்னணு பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணியினை 30.09.2026 -க்குள் முடிக்க கூடுதல் தன்னார்வலர்களை தேர்வு செய்திட தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அரசாணையில் தெரிவித்துள்ளவாறு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர்களை ஈடுபடுத்த மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
பின்னர் வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் மரு.ச.உமா தலைமையில், மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ், முன்னிலையில் வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் மரு.து.சுரேஷ், மாநகராட்சி ஆணையாளர் அ.சுல்தானா, இணைஇயக்குநர் (வேளாண்மை) ஸ்ரீ வித்யா, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.விஜய் சந்திரன், அரசு வேலூர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் (பொ) மரு.ரதி திலகம், மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் கண்ணன், குடியிருப்பு மருத்துவ அலுவலர் மரு.ரவிசந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.


Comments
Post a Comment